பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முகது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பவுலிங்கால், ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அடுத்த சில ஓவர்களில் சீட்டுக்கட்டுகள் சரிவது போல் செதில் செதிலாக சரிந்தது. அதற்கு முக்கிய காரணம் பாபர் அசாமின் விக்கெட் தான். அந்த விக்கெட்டை எடுத்தவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். அவர் செகண்ட் ஸ்பெல் பந்துவீச வரும்போது, பாகிஸ்தான் அணி 152 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் தான் இருந்தது. பாபர் அசாம் அரைசதம் அடித்து, முகமது ரிஸ்வானுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் இருந்தார்.
இந்த விக்கெட் இன்னும் சில ஓவர்கள் நீடித்தால் இந்திய அணிக்கு சேஸிங் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும் என்ற நிலை அப்போது இருந்தது. சூழலும் பாகிஸ்தான் பக்கமே மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனை சரியான நேரத்தில் இந்தியா பக்கம் திருப்பிய பெருமை சிராஜூக்கே சேரும். அவர் செகண்ட் ஸ்பெல்லில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் விக்கெட்டை துல்லியமாக வீழ்த்தினார். சரியான லைன் அன்ட் லென்தில் பந்தை வீசி, கிளீன் போல்ட் ஆக்கினார். அதன் பிறகு வெறும் 30 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். இதுவே அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்ததும் முகமது சிராஜ் தான். மெதுவாக பில்டப் ஆகிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சு குறித்து போட்டிக்குப் பிறகு சிராஜ் பேசினார். அப்போது, இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி என்று கூறினார். மற்ற அணிகளை எதிர்கொள்வதைப் போலவே பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி எதிர்கொண்டதாக தெரிவித்த அவர், ஒரு சில நாட்கள் சிறப்பாக ஒருவருக்கு அமையவில்லை என்றால் அவர்கள் மோசமான பந்துவீச்சாளர்கள் என்றாகிவிட மாட்டார்கள் என தெரிவித்தார்.
அதைப்போலவே எனக்கும் ஒரு சில நாட்கள் எனக்கானதாக இல்லை என்றால் நானும் மோசமான பந்துவீச்சாளர் கிடையாது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் எடுத்த பந்து மோசமான பந்து, சாதாரணமான பந்தெல்லாம் கிடையாது. சரியான லைன் அன்ட் லென்தில் வீசப்பட்ட நல்ல பந்தில் தான் அவர் போல்டானார். பாபர் அசாமின் விக்கெட் தான் போட்டியை இந்தியா பக்கம் திருப்பியது. அது எனக்கு மகிழ்ச்சி என்று சிராஜ் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ