நடந்து முடிந்த ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. முதல்முறையாக ஐபிஎல்லில் களமிறங்கிய குஜராத் வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியது. அதேசமயம்,குஜராத் கோப்பை வென்றதற்கு ஹரிதிக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு பெரும் பங்கு இருப்பதாக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் முதல்முறையாக பெரிய தொடரில் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற பாண்டிய எந்தவித பதற்றமுமின்றி சிறப்பாக செயல்பட்ட பாண்டிய இந்திய அணியை எதிர்காலத்தில் சிறப்பாக வழிநடத்துவார் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேப்டனாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் பாண்டிய இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இறுதிப்போட்டியில்கூட அச்சுறுத்திக்கொண்டிருந்த ஜோஸ் பட்லரை பாண்டியாவே வெளியேற்றியிருந்தார். அவர் நித சீசனில் மட்டும் 487 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் வேண்டுமென்றால் ஹர்திக் பாண்டியா இருக்கிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் செய்திருப்பது புதிய அணியின் அருமையான சாதனை… இன்னும் ஓரிரு வருடங்களில் இந்தியாவுக்கு ஒரு கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.
Fantastic achievement for a new franchise … If India need a captain in a couple of years I wouldn’t look past @hardikpandya7 … Well done Gujurat .. #IPL2022
— Michael Vaughan (@MichaelVaughan) May 29, 2022
இவரைப்போலவே இந்தியாவின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோரும் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்திருந்தனர்.
மேலும் படிக்க | விராட்கோலி இடத்தை காலி செய்யப்போகும் 19 வயது இளைஞர்
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா கேப்டனாக பதவிவகித்துவருகிறார். தென் ஆப்பிரிக்காவுடனான தொடருக்கு மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
எனவே பாண்டியாவுக்குத்தான் கேப்டன் பதவி கிடைக்கும் என ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Dinesh Karthik: தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் பறிபோன 2 பேரின் வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR