ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 14 ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. நாளையுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைய உள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முழு தொடரில் இருந்தும் பிர்த்வி ஷா விலகியுள்ளார் எனவும், அவருக்கு பதிலாக புதிய வீரர் அணியில் சேர்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிர்த்வி ஷாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்ற ஹர்திக் பண்டியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
BREAKING: @PrithviShaw has been ruled out of the remainder of the #AUSvIND Test series. @mayankcricket has been called up as his replacement.
➡️ https://t.co/nBlTkOTkm5 pic.twitter.com/7g8m9ceKDt
— ICC (@ICC) December 17, 2018
இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகள் இடையேயான பயிற்சி போட்டியின் போது பிர்த்வி ஷாவுக்கு கனுக்காலில் காயம் ஏற்ப்பட்டது. காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இன்னும் ஓய்வு தேவை என்பதால் பிரிதிவி ஷா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.