உலக மகளிர் குத்துச்சண்டையில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை....

மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

Last Updated : Nov 24, 2018, 06:16 PM IST
உலக மகளிர் குத்துச்சண்டையில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை.... title=

மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக குத்துச்சண்டைக் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன. மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றில் நுழைந்த மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒஹட்டா (Hanna okhata)-வை எதிர்கொண்டார். போட்டியில் ஆக்ரோசம் காட்டிய மேரி கோம், ஒஹட்டாவை புள்ளிகளே எடுக்கவிடாமல் 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஆறாவது முறையாக அவர் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் அதிக வெற்றிகளைக் குவித்த குத்துச்சண்டை வீரர்களுக்கான பட்டியலில், கியூபாவின் பெலிக்ஸ் சவொனுடன் (Felix savon) இணைந்துள்ளார் மேரி கோம்.

 

Trending News