LIVE IND vs WI: தோனி அதிரடி!! 50 ஓவர் முடிவில் இந்திய அணி 268 ரன்கள் எடுத்துள்ளது

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் பிற்பகல் 3 மணிக்கு மோத உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 27, 2019, 07:17 PM IST
LIVE IND vs WI: தோனி அதிரடி!! 50 ஓவர் முடிவில் இந்திய அணி 268 ரன்கள் எடுத்துள்ளது title=

19:19 27-06-2019
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 50 ஓவரில் 269 ரன்கள் தேவை. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.

 

 


19:01 27-06-2019
இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 72(82) ரன்கள் எடுத்துள்ளார். 

மேற்கு இந்திய தீவுகள் அணியின் சார்பாக கெமர் ரோச் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

 

 


18:00 27-06-2019
38.2 ஓவரில் இந்திய அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. இந்திய கேப்டன் விராட் 72(82) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


17:18 27-06-2019
28.5 ஓவரில் இந்திய அணி நான்காவது விக்கெட்டை இழந்தது. கேதார் ஜாதவ் 7(10) எடுத்து அவுட் ஆனார். 

 


17:09 27-06-2019
அரைசதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி 50(55) ரன்கள் எடுத்து தனது 53வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.


17:03 27-06-2019
26.1 ஓவரில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது இந்திய அணி. விஜய் சங்கர் 14(19) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


16:56 27-06-2019
417 இன்னிங்கில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் 20000 ரன்கள் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் விராட் கோலி.

 


16:37 27-06-2019
அரைசதம் அடிபார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 48(64) ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

 


16:33 27-06-2019
20 ஓவர் முடிவில் இந்திய ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 48(61)மற்றும் விராட் கோலி 29(36) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.


15:35 27-06-2019
5.6 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி. ரோஹித் சர்மா 18(23) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


14:43 27-06-2019
இன்றைய போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி.

 


14:38 27-06-2019
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச உள்ளது.

 


13:51 27-06-2019
எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் கடைசியாக நடந்த 3 போட்டியிலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

 

 


மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்க்கவில்லை. நியூசிலாந்துடனான போட்டி மட்டும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. மற்ற நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று 9 புள்ளியுடன் அட்டவணையில் 3வது இடத்தில் உள்ளது. இனி மீதமுள்ள போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்புக்கு முன்னேறி விடும். 

அதேபோல மேற்கிந்திய தீவுகள் அணியை பொருத்த வரை, ஆடிய ஆறு ஆட்டங்களிலும் 1 வெற்றி, 4 தோல்வி மற்றும் மழையின் காரணமாக ஒரு போட்டி ரத்து என 3 புள்ளியுடன் அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. 2019 உலக கோப்பை அரையிறுதியில் தகுதி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், அதேவேளையில் மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும். 

எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் கடைசியாக நடந்த 3 போட்டியிலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: விராத் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக்  பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரிஷப் பன்ட்.

வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கேல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஆஷ்லி நர்ஸ், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷேனான்  கேப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், சுனில் அம்ப்ரிஸ்.

Trending News