கேப்டன் பதவி மேல் பேராசை இல்லாதவர் கோலி : அனுஷ்கா ஷர்மா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 16, 2022, 05:22 PM IST
  • கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.
  • புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
கேப்டன் பதவி மேல் பேராசை இல்லாதவர் கோலி : அனுஷ்கா ஷர்மா title=

கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.  இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பிறகு அவரே எதிர்பார்க்காத விதமாக பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியது.  புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்து உள்ளார்.  

ALSO READ | இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

விராட் கோலியின் இந்த முடிவு பற்றி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில். "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுகிறார், நீதான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியது. அன்று நீ, நான், தோனி மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தோனி அன்று நகைச்சுவையாக உன் தாடி இவ்வளவு வேகமாக நரைத்துவிட்டதே என்று கூறினார். அன்றிலிருந்து நான் கவனித்து வருகிறேன். உன் தாடி மட்டும் நரைக்கவில்லை. உன் வளர்ச்சியை பார்த்திருக்கிறேன், உன்னை சுற்றியும், உனக்குள்ளும் வளர்ச்சி அபரிவிதமாக இருந்துள்ளது. நீ இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட காலத்தை நினைத்து பெருமைப்படுகிறேன், உனது காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி செய்த சாதனைகளை கண்டு வியக்கிறேன். இதையெல்லாம் விட உனக்குள் நீ சாதித்த வளர்ச்சியை நான் பெரிதாக நினைக்கிறேன்.

anuska

2014ம் ஆண்டு நீ மிகவும் அனுபவமற்ற , யாரையும் எளிதில் நம்பக்கூடிய இளம் வீரனாக இருந்தாய், நல்ல திட்டங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தாய், நேர்மறையான எண்ணங்களே உன் வாழ்க்கையை நகர்த்திச்செலும் என்று நம்பினாய். அவை நிச்சயம் நடக்கும் ஆனால் அதில் சவால்கள் அதிகம் இருந்தது. நீ களத்துக்கு வெளியே சந்தித்த சவால்கள் ஏராளம், ஆனால் இது வாழ்க்கையல்லவா, நீ குறைவாக சவால்களை எதிர்பார்த்த இடத்தில் கூட உனக்கு சவால்கள் அதிகமாகவே இருந்திருக்கிறது. உனது எண்ணங்களோடு நான் துணை நின்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

dhoni

நீ ஒரு தலைவனாக முன்னின்று வழிநடத்தினாய், வெற்றிகளில்தான் உத்வேகம் இருக்கிறது என்பதை ஒவ்வொருமுறையும் உணர்த்தினாய். சில நேரங்களில் தோல்வியடையும் போது நீ கண்ணீருடன் அமர்ந்திருக்கும் போது உன் அருகில் அமர்ந்து உன் வலியை உணர்ந்திருக்கிறேன். இன்னும் சிலவற்றை நான் செய்திருக்க வேண்டும் என்று நீ கூறுவதை கேட்டிருக்கிறேன். இதுதான் நீ, இதைத்தான் நீ அனைவரிடமும் எதிர்பார்க்கிறாய். நீ சமரசமற்றவன் , நேர்மையானவன். பாசாங்கு உன் எதிரி அதுதான் என் கண்களுக்கு உன்னை தலைவனாக காட்டியது. ஏனென்றால் நீ தூய்மையானவன், உன் கலப்படமற்ற நோக்கத்தை  எல்லாராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னதை போல இந்த கண்கள் வழியே உன் ஆளுமையை கண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நீ மிகச்சரியானவன் அல்ல, உனக்கும் சறுக்கல்கள் உண்டு ஆனால் அதை எப்படி சரிசெய்கிறாய் என்பதே உனது தனித்தன்மை.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

நீ சரியானதையே செய்கிறாய், அதற்காக கடுமையாக உழைக்கிறாய். நீ எப்போதும் எதற்காவும் பேராசை பட்டது கிடையாது. எனக்கு தெரியும் இந்த கேப்டன் பதவியும் அப்படிதான். ஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அவர்கள் அதோடு தனது எல்லையை சுருக்கி கொள்கிறார்கள் என்று அர்த்தம். நீ என் காதல், நீ எல்லைகளற்றவன். இந்த 7 வருடங்களில் நமது மகள் தந்தை என்னவெல்லாம் கடந்து வந்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். நீ சரியானதையே செய்திருக்கிறாய்" என்று கூறினார்.  இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   

LSO READ | அம்பயர்களால் இந்திய அணிக்கு கிடைத்துள்ள பரிசு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News