மைதானத்தில் புகுந்த ரசிகரை தூக்கிய பாகுபலி போலீஸ் - கோலியின் WWE ரியாக்ஷன்

ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியின்போது மைதானத்தில் புகுந்த ரசிகரை காவலர் தூக்கிச் சென்றதை பார்த்து விராட் கோலி போட்ட WWE ரியாக்ஷன் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2022, 11:06 AM IST
  • மைதானத்துக்குள் புகுந்த விராட் கோலியின் ரசிகர்
  • ஓடி வந்து அசால்டாக தூக்கிய பாகுபலி போலீஸ்
  • காவலரை பார்த்து வியந்தபோன விராட்கோலி
மைதானத்தில் புகுந்த ரசிகரை தூக்கிய பாகுபலி போலீஸ் - கோலியின் WWE ரியாக்ஷன் title=

ஐபிஎல் போட்டியின் முதலாவது குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 207 ரன்கள் குவித்து அசத்தியது. ஏலத்தின்போது யாரும் கண்டுகொள்ளாத ரஜாத் படிதார், மாற்று வீரராக பெங்களூரு அணிக்குள் வந்து அந்தப் போட்டியில் வெளுத்துக் கட்டினார். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த பெங்களுரு அணிக்கு நெருக்கடியான நேரத்தில் பிரமாதமான இன்னிங்ஸ் ஆடிக் கொடுத்து அணியையும் தனி ஒருவராக தூக்கி நிறுத்தினார்.

மேலும் படிக்க | இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ஆர்சிபி? இதை செய்தால் போதும்

ஒரு கட்டத்தில் டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பிய நேரத்தில் இவர் மட்டுமே களத்தில் இருந்தார். அப்போது, லக்னோ அணி இவரின் அதிரயை எதிர்பார்க்கவில்லை. நாலாபுறமும் பந்துகளை சுழற்றியடித்த படிதார், பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இவரின் அதிரடியால் 207 ரன்களை குவித்த பெங்களுரு அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது. 

பெங்களுரு அணி பவுலிங் செய்தபோது ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து விராட் கோலியை நோக்கி ஓடிவரத் தொடங்கினார். அவரைப் பார்த்ததும் விராட்கோலி பீல்டிங்கில் நகர்ந்தவாறு பாதுகாவலர்களை மைதானத்துக்குள் அழைத்தார். உடனடியாக மைதானத்துக்குள் வந்த பாதுகாவலர், ரசிகரை அசால்டாக தோளில் தூக்கி வைத்துக் கொண்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்றார். காவலர் ரசிகரை தூக்கியதை பார்த்து மிரண்டுபோன விராட்கோலி, ரேன்டி ஆர்டனின் பேவரைட் ஷாட்டை ரியாக்ஷனாக செய்து காண்பித்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல்லில் ராகுல் செய்த சாதனை... கெய்லே இவருக்கு பின்னாடிதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News