வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல் ஒருநாள் மற்றும் 20 ஓவர், டெஸ்ட் என மூன்று வடிவிலான இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன் பின்னர் பெரிய அளவில் விளையாடாத ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டே வருகிறது.
மோசமாக ஆடும் ராகுல்
ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டதால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பு ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர் பேட்டிங்கில் பெரிய அளவு சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்திய அணி வெற்றி பெற்ற 2வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் ஆட்டமிழந்த ராகுல், 2வது இன்னிங்ஸில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
மேலும் படிக்க | 'நீ சட்டைய கழட்டு...' எதிரணி வீரரின் செயலால் கடுப்பான விராட் - என்ன நடந்தது?
டிவிட்டரில் கடும் விமர்சனம்
இதனால் டிவிட்டரில் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாதபோது, தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் அவுட்டாகும் ராகுலுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர். பிசிசிஐ, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் நெட்டிசன்கள் தேங்க்யூ கே.எல்.ராகுல் என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
கே.எல்.ராகுல் நீக்கம்
வங்கதேசம் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமை ஏற்று கோப்பையை கைப்பற்றியிருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
மேலும் படிக்க | பென் ஸ்டோக்ஸ்ஸை எடுக்க சிஎஸ்கே! தோனி என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ