KKR அணியின் தலைமை வழிகாட்டியாக டேவிட் ஹஸ்ஸி நியமனம்!

வரவிருக்கும் IPL சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸ்ஸியை தலைமை வழிகாட்டியாகவும், நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

Last Updated : Oct 5, 2019, 05:40 PM IST
KKR அணியின் தலைமை வழிகாட்டியாக டேவிட் ஹஸ்ஸி நியமனம்! title=

வரவிருக்கும் IPL சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸ்ஸியை தலைமை வழிகாட்டியாகவும், நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

ஹஸ்ஸி மற்றும் மில்ஸ் இருவரும் அடுத்த ஐபிஎல் பதிப்பிற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் பெயரிடப்பட்ட பிரெண்டன் மெக்கல்லத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

இதுகுறித்து "நைட் ரைடர்ஸ் குடும்பத்திற்கு டேவிட் ஹஸ்ஸி மற்றும் கைல் மில்ஸை வரவேற்பது மிகவும் மகிழ்ச்சி" என்று கே.கே.ஆரின் தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி.யுமான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் தொழில் வல்லுநர்களாக அனுபவத்தின் செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள், பயங்கர நபர்கள். கே.கே.ஆரின் சிந்தனைக் குழுவின் ஒரு பகுதியாக, மற்றும் கே.கே.ஆர் அகாடமிக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." எனவும் வெங்கி தெரிவித்துள்ளார்.

உரிமையாளர்களிடமும் சர்வதேச மட்டத்திலும் 300-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய ஹஸ்ஸி, 2008-10 க்கு இடையில் கே.கே.ஆரை ஒரு வீரராக பிரதிநிதித்துவப் படுத்தினார்.

மில்ஸ், நியூசிலாந்தை 19 டெஸ்ட், 170 ஒருநாள் மற்றும் 42 டி 20 போட்டிகளில் பிரதிநிதித்துவப் படுத்தினார், இதில் அவர் முறையே 44, 240 மற்றும் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் பிளாக் கேப்ஸில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

Read in English

Trending News