மும்பை இந்தியன்ஸ் பொல்லார்டை கழற்றிவிட்டது ஏன்? பரபர பின்னணி

மும்பை இந்தியன்ஸ் அணி கைரன் பொல்லார்டை கழற்றிவிட்டது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 16, 2022, 08:04 AM IST
மும்பை இந்தியன்ஸ் பொல்லார்டை கழற்றிவிட்டது ஏன்? பரபர பின்னணி title=

மும்பை முடிவு

ஐபிஎல் 2023-க்கான பிளேயர் தக்கவைப்பு நடைமுறை முடிந்திருக்கிறது. தொடரில் இருக்கும் 10 அணிகளும் முக்கியமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டு சில வீரர்களை விடுவித்துள்ளது. அதில் பொல்லார்டு உள்ளிட்ட வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் 2009 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 13 ஆண்டுகள் விளையாடி வரும் அவரை முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களின் அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் என்ன? என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு

பொல்லார்டு விடுவிப்பு ஏன்?

மும்பை இந்தியன்ஸ் அணி கைரன் பொல்லார்டை தங்களின் அணியில் இருந்து விடுவித்தற்கு சில காரணங்கள் உண்டு. முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பொல்லார்டு அதற்காக ஆப்ரேஷன் செய்திருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயதாகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் முன்புபோல் ஆக்ரோஷம் அவரால் காட்ட முடியவில்லை. சிபிஎல் தொடரிலும் பொல்லார்டு தலைமையிலான அணி படுதோல்வியுடன் வெளியேறியது. 

இதனால் அவரை மும்பை அணி அவரை கழற்றிவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ், டிம் டேவிட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இளம் அதிரடி மன்னன்கள் அணியில் இருக்கின்றனர். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக மும்பை அணி தெரிவித்திருக்கிறது.

பொல்லார்டு உருக்கம்

மும்பை அணியின் இந்த முடிவை முழுமையாக ஏற்றிருக்கும் பொல்லார்டு, கிட்டதட்ட 13 ஆண்டுகளாக மும்பை அணிக்கு விளையாடிவிட்டு, அந்த அணிக்கு எதிராக விளையாட விரும்பவில்லை என உருக்கமாக தெரிவித்திருக்கிறார். இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாராக அவரை நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. பொல்லார்டு நினைத்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாடி இருக்கலாம். இருந்தாலும் மும்பை அணியின் மீதான பாசம் காரணமாக இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் -முழு பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News