காவ்யா மாறன் டபுள் ஹேப்பி அண்ணாச்சி... SA20 கோப்பையை தக்கவைத்த சன்ரைசர்ஸ் - பரிசு எவ்வளவு?

SA20 League 2024: தென்னாப்பிரிக்கா டி20 தொடரான SA20 2ஆவது சீசனின் கோப்பையை வென்று தனது சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தக்கவைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2024, 06:29 AM IST
  • கடந்த சீசனிலும் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • எய்டன் மார்கரம் இந்த அணிக்கு கேப்டனா உள்ளார்.
  • டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கிளாசென் தொடர் நாயகனாக தேர்வானார்.
காவ்யா மாறன் டபுள் ஹேப்பி அண்ணாச்சி... SA20 கோப்பையை தக்கவைத்த சன்ரைசர்ஸ் - பரிசு எவ்வளவு? title=

SA20 League 2024 Champions: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் SA20 லீக் என்ற பெயரில் டி20 லீக் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. வெற்றிகரமான முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது SA20 லீக்கின் இரண்டாவது சீசன் கடந்த ஜன. 10ஆம் தேதி தொடங்கியது.

கடந்த சீசனை போலவே இந்த முறையும் 6 அணிகள் பங்கேற்றன. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், எம்ஐ கேப் டவுண் ஆகிய ஆறு அணிகள் மோதின. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 மோதி பின்னர், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள் பிளேஆப் சுற்றில் மோதின.

கோப்பையை தக்கவைத்த ஈஸ்டர்ன் கேப்

SA20 லீக்கின் இறுதிச்சுற்று போட்டி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு (Sunrisers Eastern Cape vs Durban's Super Giants) இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. கேப்டன்டவுன் நியூலெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. 

மேலும் படிக்க | முடிவுக்கு வரும் கேஎஸ் பாரத்தின் டெஸ்ட் வாழ்க்கை? மற்றொரு இளம் வீரருக்கு வாய்ப்பு?

2023 சீசனில் கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது. எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டியில் சுமார் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

வெளுத்து எடுத்த சன்ரைசர்ஸ்

இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்களை சேர்த்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 56 ரன்களையும், டாம் ஆபெல் 55 ரன்களையும், ஜார்டன் ஹர்மேன் 42 ரன்களையும், கேப்டன் மார்க்ரம் 42 ரன்களையும் சேர்த்தனர். டர்பன் அணி பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

சுருண்ட டர்பன்ஸ் சூப்பர் ஜெய்ண்ட்

டி காக், பனுகா ராஜபக்சே, முல்டர், கிளாசென், பிரிட்டோரியஸ் என டர்பன் அணியன் பேட்டிங் ஆர்டரில் பல அதிரடி பேட்டர்கள் காணப்பட்டாலும் அவர்களால் சன்ரைசர்ஸின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை. அவர்கள் 17 ஓவரிலேயே 115 ரன்களுக்கு ஆல்-அவுட்டானார்கள். அதிகபட்சமாக முல்டர் 38 ரன்களையும், பிரிட்டோரியஸ் 28 ரன்களையும் சேர்த்தனர். 

அதிரடி வீரர்களான ராஜபக்சே, கிளாசென் ஆகியோர் டக்-அவுட்டானது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம். அவர்களின் ஓப்பனரான டி காக் 3 ரன்களுக்கும், நம்பர் 3 வீரர் ஜேஜே ஸ்மட்ஸ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்த பின் சேஸிங்கில் பெரும் அழுத்தம் ஏற்பபட்டது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் யான்சன் 5 விக்கெட்டுகளையும், டேனியல் வோரல் மற்றும் ஒட்னியல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

SA20 League: தொடர் நாயகன் யார் தெரியுமா?

முதல் குவாலிஃபயர் போட்டியிலும் ஈஸ்டர்ன் கேப் அணியிடம் தோல்வியடைந்த கேவச் மகராஜ் தலைமையிலான டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தது.

மேலும் படிக்க | வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை தட்டி தூக்கிய ஐபிஎல் அணி! யார் தெரியுமா?

அதை போலவே, சன்ரைசர்ஸ் அணியும் சற்றே பலம் வாய்ந்த வீரர்களை வைத்துக்கொண்டு தனது சாம்பியன்ஷிப்பை தக்கவைத்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்க சுற்றில் சில பின்னடைவுகள் இருந்தாலும் அந்த குரூப் சுற்றிலேயே 7 வெற்றிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக டாம் ஆபெல் தேர்வானார். தொடர் நாயகனாக டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கிளாசென் தேர்வு செய்யப்பட்டார். 

SA20 League: பரிசுத்தொகை எவ்வளவு?

கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 34 மில்லியன் ராண்டை (Rand) பரிசுத்தொகையாக பெற்றது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 15 கோடியாகும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த 2ஆம் இடம் பிடித்த டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16.25 ராண்டை (ரூ.7.2 கோடி) பெற்றது. 

2ஆவது குவாலிஃபயரில் தோல்வியடைந்து மூன்றாம் இடம் பிடித்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ரூ.3.9 கோடியையும், எலிமினேட்டரில் தோல்வியடைந்து வெளியேறி நான்காம் இடத்தை பிடித்த பார்ல் ராயல்ஸ் அணி ரூ.3.5 கோடியையும் பரிசாக பெறும். மேலும், குரூப் சுற்றின் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடம் பிடித்த பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.1.1 கோடியும், எம்ஐ கேப் டவுண் அணிக்கு ரூ.88 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா... இந்தியா தொடரை வெல்ல இந்த பிளேயிங் லெவன்தான் சிறந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News