13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை! பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த ஜியா ராய்

பாக் ஜலசந்தி வழியாக 13 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்தார் சிறுமி ஜியா ராய்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 22, 2022, 11:14 AM IST
  • 13 மணி நேரம் 10 நிமிடங்களில் இந்தியாவில் இருந்து இலங்கையை கடந்து சாதனை
  • பாக் ஜலசந்தி வழியாக கடல் கடந்த சாதனை
  • நீச்சல் வீராங்கனை சிறுமி ஜியா ராயின் உலக சாதனை
13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை! பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த ஜியா ராய் title=

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடல் கால்வாயான பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பது என்பது இமாலயச் சாதனை. பொதுவாக இதை கற்பனை செய்து பார்க்க முடியாது.

இந்த அபாயமான கடல் தொலைவை, மாற்றுத் திறனாளி சிறுமி ஜியா ராய் கடந்து சாதனை புரிந்துள்ளார். பாக் ஜலசந்தி வழியாக நட்புக் கடல் நீச்சல் பயணத்தை 13 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்தார் சிறுமி ஜியா ராய்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சூறாவளி உருவாகிய நாளன்று இந்த சாதனையை சிறுமி சாதித்தார் என்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.

sports

ஞாயிற்றுக்கிழமை (2022, மார்ச் 20) அன்று, தலைமன்னார் (இலங்கையின் வடமேற்கு கடற்கரை) மற்றும் தனுஷ்கோடி (இந்தியாவின் தெற்கு கடற்கரை) இடையே நீந்திய இந்த நீச்சல்  சூறாவளி, அந்தமான் தீவுக்கூட்டத்தை அசானி புயல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் கடந்தார் என்பது மாபெரும் சாதனையாகும்.  

சிறுவயதிலிருந்தே ஜியா ராய் நீச்சல் அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார், இதையடுத்து ஜியா ராய்யின் தந்தையான மதன் ராய் தனது மகளுக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இப்பதை கண்டு முறையாக பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர்.

sports

 இலங்கை-இந்தியா ஆகிய இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஜியா ராய் இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரத்தில் நீந்தி வந்து தனுஷ்கோடி அடுத்துள்ள அரிசல்முனைப்பகுதியை வந்தடைந்தார்.

மும்பையைச் சேர்ந்த ரச்சனா ராய் - மதன் ராய் தம்பதிகளின் மகளான ஜியா ராய்  காது கேளாத வாய்பேச முடியாத 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஆவார்.

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை முதன்முதலில் 13 மணி நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

sports
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஜியா ராய்க்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கடலில் நீச்சலடித்து சாதனை செய்த ஜியாவுக்கு  இந்திய கடலோர காவல் படை, கடற்படை, போலீசார் கடலில் பாதுகாப்பு வழங்கியதோடு, சாதனையை முடித்த சிறுமியை பாராட்டினார்கள்.

மேலும் படிக்க | கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News