ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது DC: என்ன ஸ்பெஷல்?

தங்களது அணிக்கான ஐபிஎல் சீருடையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 12, 2022, 06:23 PM IST
  • ஐபிஎல் சீருடையை அறிமுகம் செய்தது டெல்லி கேப்பிடல்ஸ்
  • டெல்லி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை
  • மும்பைக்கு எதிராக மார்ச் 27ஆம் தேதி முதல் போட்டி
ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது DC: என்ன ஸ்பெஷல்? title=

தங்களது அணிக்கான ஐபிஎல் சீருடையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் இத்தொடருக்குத் தங்களைத் தயார்படுத்திவருகிறது. அந்த வகையில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது. சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சீருடையின் காலர் பகுதி முழுமையான சிவப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் முதல் சீருடை அவ்வணியின் ரசிகர் ஒருவருக்கு, ஹோம் கிரவுண்டான டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!

டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துவந்த ஸ்ரேயஸ் ஐயர், கடந்த சீசனின்போது காயம் காரணமாக பாதியில் விலகியதால் ரிஷப் பந்த் அவ்வணிக்குத் தலைமையேற்றார். இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத டெல்லி அணி, நடப்பு ஐபிஎல்லில் மார்ச் 27ஆம் தேதி தனது முதல் போட்டியை விளையாடுகிறது. மும்பை அணிக்கு எதிராக விளையாடவுள்ள இப்போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை 210 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி அவற்றில் 93 போட்டிகளில் வென்றுள்ளது. 111 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. 45க்கும் அதிகமான வெற்றி சதவிகிதத்தையும் அவ்வணி கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபிக்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News