326 நாள்களுக்கு பின் களத்தில்... வந்த உடன் சாதனை படைக்க காத்திருக்கும் பும்ரா - என்ன தெரியுமா?

Jaspirit Bumrah: ​இந்திய அணிக்கு காயத்தில் இருந்து மீண்டு, சுமார் 326 நாள்களுக்கு பின் இன்று விளையாட வரும் பும்ரா புதிய சாதனையை படைக்க காத்திருக்கிறார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 02:09 PM IST
  • பும்ரா 2016இல் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
  • இதுவரை டி20 போட்டிகளில் அவர் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • குறிப்பாக, டெத் ஓவர்களில் மட்டும் 35 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.
326 நாள்களுக்கு பின் களத்தில்... வந்த உடன் சாதனை படைக்க காத்திருக்கும் பும்ரா - என்ன தெரியுமா? title=

Jaspirit Bumrah: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு, இந்திய அணிக்கு தற்போது திரும்பியுள்ளார். சுமார் 326 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சர்வதேசப் போட்டியில் மீண்டும் பும்ரா பந்துவீச உள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதன் கூடவே அவருக்கு இன்று தொடங்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பந்துவீச்சாளராக மீண்டும் தன்னை நீருப்பிக்க வேம்டிய கட்டாயத்தில் இருக்கும் பும்ரா, கேப்டனாகவும் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளார். 

இந்திய அணி ஆக. 18 (இன்று), ஆக. 20, ஆக. 23 ஆகிய தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடுகிறது. வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதற்கு முன், 50 ஓவர் வடிவிலான ஆசிய கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இதில், ஜஸ்புரித் பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்து, மீண்டும் பழைய பார்மை மீட்டெடுத்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். 

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு வைக்கிறாரா ஜிதேஷ் சர்மா? டீம் இண்டியா என்ன செய்யும்?

இது ஒருபுறம் இருக்க, பும்ரா கம்பேக் கொடுக்க ஒரு சிறப்பான சாதனையும் இந்த அயர்லாந்து டி20 தொடரில் காத்திருக்கிறது. அதாவது, இந்திய அணிக்காக டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக பும்ரா மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

தற்போது, புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை டெத் ஓவர்களின் போது (16 முதல் 20 ஓவர்கள் வரை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளின் டெத் ஓவர்களில் இதுவரை 35 விக்கெட்டுகளை பெற்றுள்ள பும்ரா, பட்டியலில் புவனேஷ்வர் குமாரை மிஞ்ச இன்னும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் போதும்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவை பின்னுக்குத் தள்ள பும்ராவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. பும்ரா ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டிய 73 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து அனைத்து வடிவங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியதில் பும்ரா இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவுக்காக முன்னணி விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அடுத்தபடியாக பும்ரா தான் உள்ளார். 

வேகப்பந்துவீச்சாளராக அணிக்குள் நுழைந்த பும்ரா காலப்போக்கில், அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் வரும் உலகக்கோப்பை அணி தேர்வின் கண்ணோட்டத்தில் முக்கியமானதாக இருக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆசிய கோப்பை அணியை அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ரா தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News