இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயரான ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விளையாடவில்லை. ஆசிய கோப்பையில் இடம்பெற்றிருந்த அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், அதன்பிறகு இந்திய அணி பங்கேற்ற எந்த தொடரிலும் விளையாடவில்லை. எப்போது அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தாக இந்திய அணி விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆலன் பார்டர் டெஸ்ட் தொடரில் 17 பேர் கொண்ட அணியில் ஜடேஜாவை பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
சென்னையில் ஜடேஜா
இருப்பினும் நீண்ட நாட்களாக அவர் ஓய்வில் இருந்ததால் உடல் தகுதியையும், முறையான பயிற்சியும் அவசியம் என்பதை உணர்ந்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை ரஞ்சி டிராபியில் விளையாடுமாறு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்க உள்ளார். தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா இடையே நடைபெறும் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக அவர் களமிறங்க இருக்கிறார்.
Vanakkam Chennai..
— Ravindrasinh jadeja (@imjadeja) January 22, 2023
இவ்விரு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை வந்திருக்கும் ஜடேஜா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வணக்கம் சென்னை என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
சௌராஷ்டிரா அணி மகிழ்ச்சி
ஜடேஜா சௌராஷ்டிரா அணிக்காக விளையாட இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஒடெட்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, ரஞ்சி டிராபியில் ஜடேஜா அணிக்கு விளையாட இருப்பதை அறிந்ததும் நானும், அணி வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். உடனடியாக அவருக்கு மெசேஜ் அனுப்பினேன்.
— Ravindrasinh jadeja (@imjadeja) January 19, 2023
உங்கள் வருகையை அணி ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது என தெரிவித்தேன். உடனடியாக பதில் அளித்த அவர், நானும் ஆவலாக இருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார். தமிழ்நாடு அணிக்கு எதிராக சௌராஷ்டிரா சிறப்பாக விளையாடும் என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் ஒடெட்ரா கூறினார்.
ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆலன் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டிக்குப் பிறகு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் முறையே டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
மேலும் படிக்க | வடிவேலு பாணியில் நண்பனிடம் ஏமாந்த உமேஷ் யாதவ்..! ரூ.44 லட்சம் அபேஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ