இந்திய அணியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அணியை வெளியிடுவதில் பிசிசிஐ தாமதப்படுத்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷுப்மான் கில் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகிய நான்கு முக்கிய வீரர்களும் தற்போது காயத்தில் உள்ளனர். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது அணிக்கு பின்னடைவாக உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே முன்னணி ஸ்பின்னர் ஆகா அணியில் உள்ளார்.
ALSO READ | தலைகீழாக நின்று Wide குடுத்த அம்பயர்! வைரல் வீடியோ
கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இரண்டாவது டெஸ்டில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது. மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அக்சர் படேல் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது அவரும் காயத்தில் உள்ளார். ஜடேஜா அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக உடல் தகுதி பெறுவார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஷுப்மான் கில்லின் தாடை காயம் காரணமாக அவரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டார் என்றே கூறப்படுகிறது. மேலும் இஷாந்த் ஷர்மாவும் கடைசி நேரத்தில் காயம் சரியானால் மட்டுமே அணியில் இணைக்கபட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ யாரை அணியில் சேர்ப்பார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.
ALSO READ | Ashes-ல் அசத்திய ஸ்டார்க்! இங்கிலாந்து 147க்கு ஆல் அவுட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR