ஐபிஎல் கிர்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்!!

Last Updated : Apr 5, 2017, 09:47 AM IST
ஐபிஎல் கிர்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்!! title=

உலகின் மாபெரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 10-வது தொடர் ஏப்ரல் 5-ம் தேதி அதாவது இன்று தொடங்குகிறது. 

ஹைதராபாத்தில் இன்று தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கிரிக்கெட் திருவிழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. 

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது. 

இன்று ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6-ம் தேதியும், ராஜ்கோட்டில் 7-ம் தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8-ம் தேதியிலும், மும்பையில் 9-ம் தேதியும், கொல்கத்தாவில் 13-ம் தேதியுமம், டெல்லியில் 15-ம் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெறுகின்றன. 

பஞ்சாப்:-

மேக்ஸ்வெல் (கேப்டன்), வருண் ஆரோன், ஹஷிம் ஆம்லா, அனுரீத் சிங், அர்மான் ஜாபர், கே.சி.கரியப்பா, மார்ட்டின் கப்டில், குருகீரத் சிங், மட் ஹென்றி, ஷான் மார்ஷ், டேவிட் மில்லர், இயான் மோர்கன், நிகில் நாயக், டி.நடராஜன், அக்ஷர் படேல், ரித்திமான் சாஹா, பர்தீப் சாஹு, டேரன் சமி, சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, ரிங்கு சிங், மார்கஸ் ஸ்டானிஸ், ஸ்வப்னில் சிங், ராகுல் டிவேட்டியா, ஷர்துல் தாக்குர், முரளி விஜய், மனன் வோரா, இஷாந்த் சர்மா.

பெங்களூர்:-

விராட் கோலி (கேப்டன்), சாமுவேல் பத்ரீ, அவேஷ் கான், ஸ்ரீநாத் அரவிந்த், ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திர சாஹல், அங்கீத் செளத்ரி, டிவில்லியர்ஸ், பிரவீண் துபே, கிறிஸ் கெயில், டிராவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னி, பவன் நெகி, ஹர்ஷல் படேல், சச்சின் பேபி, டேப்ரைஸ் ஷம்ஸி, பில்லி ஸ்டான்லேக், ஷேன் வாட்சன்.

டெல்லி:-

ஜாகீர்கான் (கேப்டன்), அங்கித் பாவ்னே, கலீல் அஹமது,கோரே ஆண்டர்சன், முருகன் அஸ்வின், சாம் பில்லிங்ஸ், கார்லோஸ் பிரத்வெயிட், பேட் கம்மின்ஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஏஞ்செலோ மேத்யூஸ், சாமா மிலிந்த், அமித் மிஸ்ரா, முகமது சமி, கிறிஸ் மோரீஸ், சபேஸ் நதீம், கருண் நாயர், ரிஷப் பந்த்,பிரதியூஷ் சிங், காகிசோ ரபாடா, நவ்தீப் சைனி, சஞ்ஜு சாம்சன், சஷாங்க் சிங், ஆதித்ய தாரே, ஜெயந்த் யாதவ்.

கொல்கத்தா:-

கம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், ரன் பிராவோ, பியூஷ் சாவ்லா, நாதன் கோல்ட்டர் நீல், காலின் டி கிராண்ட்ஹோம், ரிஷி தவன், சயான் கோஷ், ஷெல்டான் ஜாக்சன்,இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுநீல் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரூமன் பாவல், அங்கித் ராஜ்புட், சஞ்சய் யாதவ், ஷகிப் அல்ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புணே:-

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மயங்க் அகர்வால், அங்கித் சர்மா, பாபா அபராஜித், அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், டேனியல் கிறிஸ்டியான், எம்.எஸ்.தோனி, அசோக் திண்டா, டூபிளெஸ்ஸிஸ், பெர்குசன், ஜேஸ்கரன் சிங், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், அஜிங்க்ய ரஹானே, செளரவ் குமார், பென் ஸ்டோக்ஸ், மிலிந்த் டான்டன், மனோஜ் திவாரி, ஜெயதேவ் உனட்கட், ஆடம் ஸம்பா.

மும்பை:-

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பூம்ரா, ஜோஸ் பட்லர், ஷ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கெளதம், அசேலா குணரத்னே, ஹர்பஜன் சிங், மிட்செல் ஜான்சன், குல்வந்த் கெஜ்ரோலியா, சித்தேஷ் லேடு, மிட்செல் மெக்லீனாகான்,
லசித் மலிங்கா, ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, பார்த்திவ் படேல், கிரண் போலார்ட், நிகோலஸ் பூரன், தீபக் பூனியா, நிதிஷ் ராணா, அம்பட்டி ராயுடு, ஜிதேஷ் சர்மா, கரண் சர்மா, லென்டில் சிம்மன்ஸ், டிம் செளதி, ஜெகதீசா சுசித், செளரவ் திவாரி, வினய் குமார்.

குஜராத்:-

ரெய்னா (கேப்டன்), ஆகாஷ்தீப் நாத், சுபம் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஃபாக்னர், ஆரோன் ஃபிஞ்ச், மன்பிரீத் கோனி, இஷன் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகாத்தி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கெளஷிக், தவல் குல்கர்னி, பிரவீண் குமார், பிரென்டன் மெக்கல்லம், முனாஃப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷெல்லி ஷெளர்யா, நாது சிங், டுவைன் ஸ்மித், தேஜாஸ் பரோக்கா, ஆண்ட்ரூ டை.

ஹைதராபாத்
டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மாய் அகர்வால், ரிக்கி பூய், பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவன், இகலவியா துவிவேதி, மோசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கெளல், புவனேஸ்வர் குமார், பென் லாஃப்லின், அபிமன்யூ மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஆசிஷ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஸ்ரன், பிரவீண் டாம்பே, கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங்.

Trending News