IPL 2023: நடப்பு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத், அகமதாபாத் அணிகள் கடந்த சீசனில் அறிமுகமாகின. அதற்கு முன்னரும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் இந்தியா, குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளும் தொடரில் விளையாடி உள்ளன. மேலும், டெக்கான் சார்ஜஸ் அணிக்கு மாற்றாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2013ஆம் ஆண்டில் அறிமுகமானது.
இருப்பினும், அனைத்து அணிகளுக்கும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் உள்ள அணியை ரசிகர்கள் விரும்புவார்கள் என்றாலும், அணியின் கட்டமைப்பு, அந்த அணியின் செயல்பாடு ஆகியவையும் ரசிகர் படையை தீர்மானிக்கும் எனலாம். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அணிகளின் ரசிகர்களிடையே எந்த அணிக்கு ஆதரவு அதிகம் என சண்டைகள் நடைபெறும்.
ஆனால், அதற்கு தீர்வு காண்பது சற்று கடினம் என்றாலும், தற்போதைய சூழலில் எந்த அணிக்கு இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம். இங்கு இன்ஸ்டாகிராமை தேர்வு செய்ததற்கான காரணம், ஐபிஎல் தொடரை அதிகம் பின்தொடரும் இளம் தலைமுறையினர் அதிக உலாவும் இடம் இன்ஸ்டாகிராம் என்பதால்தான்.
10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ அணிதான் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த அணி கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. கேஎல் ராகுல் தலைமையிலான இந்த அணியில், கம்பீர், ஆண்டி பிளவர் உள்ளிட்டவர்கள் பயிற்சியாளராக உள்ளனர். இந்த அணிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
9. குஜராத் டைட்டன்ஸ்
கடந்தாண்டு அறிமுகமாகி, முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கு 9ஆவது இடத்தை பிடிக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோர் உள்ளதாலும், தொடர்ந்து பலம் வாய்ந்த அணியாக வலம் வருவதாலும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம். குஜராத் அணியை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
மேலும் படிக்க | IPL: கேன் வில்லியம்சன் காயம் சிறியது! ஆனால் 2023இல் இந்தியாவில் விளையாட முடியாது
8. பஞ்சாப் கிங்ஸ்
கடந்த 15 சீசன்களாக ஐபிஎல் தொடரில் இருந்தாலும், இந்த அணி ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. தொடக்கத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என பெயரில் விளையாடியது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் என பெயரை மாற்றியது. 2014ஆம் ஆண்டில் மட்டும் இந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. தொடர்ந்து வீரர்கள் மாறப்பட்டாலும், அணியின் பார்ட்னர் பிரீத்தி ஜிந்தாவுக்கு அதிக ரசிகர்கள் எனலாம். இந்த அணிக்கு இன்ஸ்டாவில் 28 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.
7. ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்திய ராஜஸ்தான் அதன்பிறகு கோப்பையை பெறவே இல்லை. கடந்தாண்டு, சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும், இந்திய கிரிக்கெட்டிலேயே இளம் வீரர்களில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் சஞ்சு சாம்சன் என்பதால், இங்கும் அவருக்கு ரசிகர் படையில் குறைவில்லை. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள அட்மின்கள் பரவலான கவனத்தை பெறுபவர்கள். இந்த அணிக்கு இன்ஸ்டாவில் 29 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.
6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2013ஆம் ஆண்டில் அறிமுகமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தற்போது 30 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். அதாவது, மிக பலமான ரசிகர் படை இவர்களுடையது எனலாம். அணி எப்படி விளையாடினாலும் தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் இவர்களும் ஒருவர். இருப்பினும், இந்த அணி 6ஆவது இடத்தில் உள்ளது.
5. டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸாக இருந்த காலத்தில் இருந்து, டெல்லி கேப்பிடல்ஸ் ஆக மாறிய பின்னரும் இந்த அணிக்கு ரசிகர் படையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது ரிஷப் பண்ட் இந்த அணியின் முகமாக உள்ளார். விபத்து காரணமாக அவர் விளையாடாவிட்டாலும் தொடர்ந்து அந்த அணிக்கு ஆதரவாக உள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இன்ஸ்டாவில் 35 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
Touchdown Guwahati #YehHaiNayiDilli #IPL2023 pic.twitter.com/x29BhRs0hU
— Delhi Capitals (@DelhiCapitals) April 6, 2023
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இரு முறை கோப்பைகளை வென்ற கேகேஆர் தான் இதில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. சுனில் நரைன், ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரர்கள் மெக்கலம் போன்ற அதிரடி பயிற்சியாளர்கள் உள்ள அணியாகும். குறிப்பாக, நடிகர் ஷாருக்கானின் அணி என்பதால் அவர்களின் ரசிகர்களும் இதனை அதிகம் பின்தொடர்கின்றனர். இந்த அணியை 39 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
'ஈ சாலா கப் நமதே' என கடந்த 15 சீசன்களாக மிக மிக தன்னம்பிக்கையுடன் இருக்கும் ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்கள்தான். இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வாங்காவிட்டாலும், விராட் கோலிக்கு பக்கத்துணையாக ரசிகர்கள் ஆர்சிபியை பின்தொடர்கின்றனர். 10.3 மில்லியன் (1 கோடி 30 ஆயிரம்) பாலோயர்ஸ் உடன் அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
Respect, rivalry and everything in between!#WhistlePodu #Yellove @mipaltan pic.twitter.com/1Z6LlAM2AT
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2023
2. சென்னை சூப்பர் கிங்ஸ்
நான்கு முறை சாம்பியன் எல்லாவற்றையும் விட தோனி என்ற ஒற்றை மந்திரத்திற்காக கூடிய கூட்டம் என்றால் அது இந்த மஞ்சள் படையாக தான் இருக்கும். இந்த அணியை இன்ஸ்டாகிராமில் 11.4 மில்லியன் (1 கோடியே 14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.
1. மும்பை இந்தியன்ஸ்
ஐந்து கோப்பைகளை வென்று ஐபிஎல் தொடரின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் மும்பை அணிதான் இந்த பட்டியலிலும் முதன்மையாக உள்ளது. இந்த அணியை 11.5 மில்லியன் பேர் (1 கோடியே 15 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.
மேலும் படிக்க | அடேங்கப்பா! ஐபிஎல் போட்டியில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ