ஆந்திராவுல கால வச்ச ரோகித்தின் மும்பை படை: சன்ரைசர்ஸை சொந்த மண்ணில் வீழ்த்த வியூகம்

srhvsmi ipl 2023 match prediction; அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு ஹைதராபாத்துக்கு வந்திறங்கியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 18, 2023, 02:12 PM IST
ஆந்திராவுல கால வச்ச ரோகித்தின் மும்பை படை: சன்ரைசர்ஸை சொந்த மண்ணில் வீழ்த்த வியூகம் title=

ஹாரி ப்ரூக் அபாரம்

ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்குக்கு சந்திக்கின்றன. ஹைதராபாத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கடந்த இரு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புத்துணர்ச்சியுடன் இருக்கின்றன. அந்த வெற்றிக் கணக்கை இன்றைய போட்டியிலும் தொடர வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக் பார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. தொடரின் முதல் சில போட்டிகளில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், கடந்த போட்டியில் அதிரடியாக சதமடித்து அசத்தினார்.

மும்பை பிளான்

எய்டன் மார்கிரம் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் பார்ம் அவுட்டில் இருந்த சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பழைய ஃபார்முக்கு திரும்பிருக்கின்றனர். கடந்த போட்டியில் இருவரும் ஆடிய ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தத்து. கொல்க்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டது. கேப்டன் ரோகித் சர்மாவை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்திக் கொண்டு, சூர்ய குமார் யாதவை ஆன்பீல்டு கேப்டனாக நியமித்தனர். இது அந்த அணிக்கு கூடுதல் பந்துவீச்சாளரை பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது. 

மேலும் படிக்க | CSKvsRCB: ஓவரா கொண்டாடாதீங்க விராட் கோலி - 10% பைன் போட்ட பிசிசிஐ: இதுதான் காரணம்..!!

மும்பை - ஹைதராபாத் நேரலை

அதே ஃபார்முலாவை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கடைபிடிக்க மும்பை திட்டமிட்டிருக்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு சரியாக போட்டி தொடங்க இருக்கிறது. மொபைலில் பார்ப்பவர்கள் ஜியோ சினிமா செயலி மூலம் இலவசமாக இந்த போட்டியை கண்டுகளிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டரில் பார்ப்பவர்கள் ஜியோ சினிமா தளத்துக்கு சென்று பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்பு செய்யும்.

இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ரிலே மெரிடித், ஜேசன் பெஹ்ரென்டாஃப்

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News