ஆர்சிபி-ஐ 2 வருஷமா பதம் பார்த்திருக்கிறது பஞ்சாப் - இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?

ஆர்சிபி அணியுடன் மோதிய கடைசி 6 போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரு அணிகளும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2023, 02:08 PM IST
ஆர்சிபி-ஐ 2 வருஷமா பதம் பார்த்திருக்கிறது பஞ்சாப் - இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்? title=

மொகாலியில் இன்று நடைபெறும் 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றியும், ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்தது. இருப்பினும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் அந்த அணி, சொந்த மண்ணில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வரிசையாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் ஆர்சிபி அணி இப்போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்கும் எண்ணத்தில் உள்ளது. 

தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணியை வீழ்த்திய தெம்புடன் டெல்லி அணியை எதிர்கொண்டு அந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. ஆனால், கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து, அதிர்ச்சி கொடுத்தது. வரிசையாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் ஆர்சிபி, இப்போட்டியில் இருந்தாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற இலக்குடன் களம் காண இருக்கிறது. 4 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.

மேலும் படிக்க | Arjun Tendulkar: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?

இந்த ஆண்டாவது ஐபிஎல் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்ட ஆர்சிபி திடீரனெ தோல்வி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக் கணக்கை பஞ்சாப் அணி இன்றும் தொடருமா? அல்லது ஆர்சிபி அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு மொஹாலியில் நடைபெறுகிறது.

இரு அணிகளின் உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங், சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸி, விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (WK), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னெல், வைஷாக் விஜய் குமார், முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய் 

மேலும் படிக்க: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News