IPL2023 News: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, தங்களது அணி வீரர்கள் களத்தில் நிறைய தவறுகளைச் செய்து எதிரணிக்கு வெற்றியைப் பரிசளித்ததாக காட்டமாக கூறினார். முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 201 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது. இதனை துரத்திய ஆர்சிபி அணி, 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி அரைசதம் அடித்தபோதும் மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
கொல்கத்தா சிறப்பான பந்துவீச்சு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லெக் ஸ்பின்னர்கள் வருண் சக்ரவர்த்தி (3/27), சுயாஷ் சர்மா (2/30) ஆகியோர் இணைந்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். அன்ட்ரே ரசல் (29 ரன்களுக்கு 2) 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவர்களின் சிறப்பான பந்துவீச்சு மூலம் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணிலேயே கொல்கத்தா அணி வீழ்த்த முடிந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 29 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசி 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் நிதீஷ் ராணா 21 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 48 ரன்கள் குவித்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் கேகேஆர் அணி 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க | RCB vs KKR: பெங்களூருவை மீண்டும் வீழ்த்திய கேகேஆர்... கோலியின் அரைசதமும் வீண்!
விராட் கோலி கடுங்கோபம்
போட்டிக்குப் பிறகு விராட் கோலி பேசும்போது, உண்மையைச் சொல்வது என்றால், போட்டியை கேகேஆர் அணிக்கு நாங்கள் பரிசாக கொடுத்துவிட்டோம். நாங்கள் இந்த போட்டியில் தோல்வியடைய தகுதியானவர்கள். நாங்கள் போதுமான அளவில் களத்தில் சிறப்பாக விளையாடவில்லை. நாங்கள் நன்றாக பந்து வீசினோம். ஆனால் பீல்டிங் தரமானதாக இல்லை. RCB பீல்டர்கள் நைட் ரைடர்ஸ் கேப்டன் ராணாவுக்கு இரண்டு முறை கேட்சுகளை கோட்டை விட்டு வாய்ப்பு கொடுத்தனர். அதேபோல் ஜேசன் ராய் கேட்சையும் நழுவ விட்டோம்.
பீல்டிங் படுமோசம்
பீல்டிங்கில் இத்தனை வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதால், இதனால் நாங்கள் 25 முதல் 30 ரன்கள் கூடுதலாக கொடுக்க வேண்டியிருந்தது. மற்றொரு புறம் பேட்டிங்கில் சிறப்பாக ஆரம்பித்தோம். மிடில் ஆர்டரில் எளிதாக நான்கு-ஐந்து விக்கெட்டுகளை எளிதாக இழந்தோம். அவை விக்கெட் எடுக்கும் பந்துகள் கூட அல்ல. ஃபீல்டர்களின் கைகளில் நேராக ஷாட்களை அடித்து கேட்ச் கொடுத்தோம். இவையெல்லாம் இலக்கை துரத்தும்போது எப்படி வெற்றியை கொடுக்கும். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் எங்களால் உருவாக்க முடியவில்லை. இதுவே தோல்விக்கு மிக முக்கிய காரணம்" என கடுப்பாக பேசி முடித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ