IPL 2023 LSG vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 10ஆம் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இப்போட்டி, லக்னோவில் உள்ள எக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றத. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, கடந்த போட்டியை போலவே போன்றே தடுமாறியது.
தொடரும் தடுமாற்றம்
கேப்டன் எய்டன் மார்க்ரம் அணியில் இணைந்தாலும், வலுவான டாப் ஆர்டர் பேட்டர்கள் இல்லாதது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 34 (41), அன்மோலபிரீத் சிங் 36 (26) ரன்களை அடித்தனர், இறுதியில் வந்த அப்துல் சமாத் 10 பந்துகளில் 21 ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். லக்னோ பந்துவீச்சு தரப்பில் குர்னால் பாண்டியா 3, அமித் மிஸ்ரா 2, பீஷ்னோய் 1 என விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
குர்னால் நிதானம்
தொடர்ந்து, 122 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு, கைல் மேயர்ஸ் சற்று நல்ல தொடக்கத்தை அமைத்தார். இருப்பினும், அவர் 13(14) ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த தீபக் ஹூடா 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ராகுல், குர்னால் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இணைந்து 55 ரன்களை சேர்த்தபோது, குர்னால் பாண்டியா 34 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.
Nicholas Pooran finishes things off in style.@LucknowIPL chase down the target with 4 overs to spare as they beat #SRH by 5 wickets.
Scorecard - https://t.co/7Mh0bHCrTi #TATAIPL #LSGvSRH #IPL2023 pic.twitter.com/STXF5KLMuI
— IndianPremierLeague (@IPL) April 7, 2023
கேஎல் ராகுல் 35, ஷெப்பர்ட் 0 ஆகியோர் அடில் ரஷித் பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 7ஆவது வீரராக வந்த பூரன் ஆட்டத்தை சிக்ஸர் அடித்து முடித்துவைத்தார். இதன்மூலம், லக்னோ அணி 16 ஓவர்களில் இலக்கை அடைந்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்தது. ஹைதராபாத் அணியில் ரஷித் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஃபருக்கி, உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை குர்னால் பாண்டியா தட்டிச்சென்றார்.
புள்ளிப்பட்டியல்
லக்னோ அணி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லியை வீழ்த்தியிருந்தாலும், அடுத்த போட்டியில் சென்னையிடம் மண்ணைக் கவ்வியது. இருப்பினும் இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் மீதம் வைத்து ஆட்டத்தை முடித்ததால் நெட் ரன் ரேட்டும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த இரண்டாவது வெற்றி மூலம் நான்கு புள்ளிகளுடன் லக்னோ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு தோல்விகளுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது.
நாளைய போட்டிகள்
ஐபிஎல் தொடரில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 11ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் - டெல்லி அணிகள் கௌகாத்தியில் மோதுகின்றன. இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகின்றது. அடுத்த லீக் போட்டியில், மும்பை - சென்னை அணிகள் வான்கடேவில் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. https://zeenews.india.com/tamil/sports/ipl/which-ipl-team-have-high-fan-...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ