சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் நிலையில், மகிழ்ச்சியான செய்தியாக இளம் யார்க்கர் புயல் அணியுடன் இணைந்துள்ளார். காயம் காரணமாக முகேஷ் சவுத்திரி சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார். அவருடைய விலகல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாற்று வீரர் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவருடைய இடத்துக்கு 19 வயதான ஆகாஷ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. யார்க்கர் புயலான அவரை தோனி தேர்வு செய்து அழைத்து வந்துள்ளார்.
சிஎஸ்கே 9வது இடம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. தோனிக்கு பதிலாக கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. அவரும் சிறப்பாக பந்துவீச வில்லை. இதனால் உடனடி நடவடிக்கையில் இறங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம் தொடரின் நடுவே திடீரென ஜடேஜாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தோனியை கேப்டனாக அறிவித்தது. இது அணிக்குள்ளும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனால், சிஎஸ்கே ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை.
பென்ஸ்டோக்ஸ் வருகை
ஆனால் இந்தமுறை பழைய பன்னீர்செல்வமாக வரவேண்டும் என முடிவெடுத்த தோனி, அவரது ஆட்டத்தை ஐபிஎல் ஏலத்திலேயே தொடங்கிவிட்டார். நல்ல வீரர்களை தட்டி தூக்குவதில் கவனம் செலுத்தினார். அதனால், இங்கிலாந்து அணியின் கேப்டனும் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே ஏலம் எடுத்தது. பிராவோ இல்லாத இடத்தை அவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் சவுத்திரி காயம்
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சரிசமமான கலவையில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், வலுவான அணியாக களமிறங்க திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த அணியின் ஸ்டார் பவுலராக இருந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்திரி காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது விலகலை மார்ச் 30 ஆம் தேதி சிஎஸ்கே அணி அறிவித்த நிலையில், முகேஷ் சவுத்திரிக்கு மாற்றாக ஆகாஷ் சிங்-ஐ தேர்வு செய்துள்ளது. 19 வயதான அவர் யார்க்கர் வீசுவதில் கில்லி.
தோனியின் மாஸ்டர் பிளான்
சிஎஸ்கே அணியின் வலைப் பயிற்சியில் பந்துவீசிய அவருக்கு இப்போது 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர், 140 கிலோ மீட்டர் வேகத்தில் இன்சுவிங் வீசக்கூடியவர். குறிப்பாக யார்க்கர் வீசுவதில் கில்லியான அவர் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடினார். அவரை குறி வைத்திருந்த தோனி சரியான நேரத்தில் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார். 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆகாஷ் சிங் 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: ஜியோ சினிமாவில் ஐபிஎல் 2023 இலவசமாக பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ