ஐபிஎல் மெகா ஏலம்: அதிகார்வப்பூர்வ தேதி அறிவிப்பு!

ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் 12,13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2022, 03:51 PM IST
  • ஐபிஎல் 15வது சீசனில் உலக கிரிக்கெட்டில் உள்ள பெரிய நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர்.
  • ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், உமேஷ் யாதவ் போன்றவர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு கொண்டுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்: அதிகார்வப்பூர்வ தேதி அறிவிப்பு! title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற உள்ளது. ஐபிஎல் (IPL)15வது சீசனில் உலக கிரிக்கெட்டில் உள்ள பெரிய நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர். ஏலத்தில் பதிவு செய்த 590 வீரர்களில் 228 பழைய வீரர்களும், 355 புதிய வீரர்களும் உள்ளனர்.  

IPL

ALSO READ | IPL 2022: கொல்கத்தா மற்றும் டெல்லி டார்கெட் செய்யும் வீரர்கள்!

ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ஆர் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷான், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களை எடுக்க கடுமையான போட்டி நிலவ உள்ளது.  ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், போன்றவர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு கொண்டுள்ளது.  

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் அஹமதாபாத் என 10 ஐபிஎல் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ஃபாஃப் டு பிளெசிஸ், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, டிரெண்ட் போல்ட், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஷகிப். அல் ஹசன், வனிந்து ஹசரங்கா மற்றும் பல முக்கிய வெளிநாட்டு வீரர்களின் பெயர்களும் இந்த ஏலத்தில் உள்ளது.  ஒவ்வொரு வீரருக்கும் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் 48 வீரர்கள் தங்களை தேர்வு செய்துள்ளனர். 

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

டெல்லி கேபிடல்ஸ் (டிசி): ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, பர்ஸில் இருந்து 8 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்): சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

ALSO READ | மகாராஷ்டிராவில் மட்டும் ஐபிஎல் 2022 போட்டிகள்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News