15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்தநிலையில், இன்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடிய இந்திய வீரரான தீபக் சாஹரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அவரை சென்னை அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணி இதுவரை பிராவோ, ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான தீபக் சஹாரை 14 கோடி ரூபாய்க்கு திரும்ப வாங்கப்பட்டதால், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விலைக்கு திரும்ப வாங்கப்பட்டவர் என்ற பெருமையை தீபக் சாஹர் பெற்றுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சாஹரை ஏலத்தில் கேட்டது, இருப்பினும், அவர் இறுதியில் CSK அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். சிஎஸ்கே நான்கு வீரர்களைத் தக்கவைத்து, 48 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் நுழைந்தது.
ALSO READ | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர்
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), கேப்டன் எம்எஸ் தோனி (ரூ. 12 கோடி), இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி (ரூ. 8 கோடி), மற்றும் இளம் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 8 கோடி) போன்றவர்களை சென்னை அணி தக்க வைத்துக் கொண்டது.
இதுவரை, சாஹர் சென்னை அணிக்காக 63 போட்டிகளில் விளையாடி 7.8 என்ற எக்னாமிக் அடிப்படையில் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த சீசனில், அவர் 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனில் சிஎஸ்கே சாம்பியன் படத்தை வென்றது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கான இடையேயான ஏலப் போருக்குப் பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் 4 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.
விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15.25 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து பேட்டர் ஜானி பேர்ஸ்டோவை 6.75 கோடி ரூபாய்க்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கினார்கள்.
ALSO READ | ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம் - மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR