ஐபிஎல் 2021 எலிமினேட்டர் போட்டி: IPL 2021 தொடரின் பிளேஆப்பின் இரண்டாவது போட்டி, அதாவது எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறும். இன்றைய போட்டியில், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்றைய போட்டி ஷார்ஜாவில் நடைபெறும்.
இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டி. இன்று எந்த அணி தோற்றாலும், ஐபிஎல் 2021 பட்டத்தை வெல்லும் அவர்களின் கனவு தகர்ந்துவிடும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அக்டோபர் 13 புதன்கிழமை நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
இன்றைய போட்டியில், இரு அணிகளின் விளையாடும் லெவன் பற்றி பேசினால், விராட் கோலி இன்று எந்த மாற்றமும் இல்லாமல் களம் இறங்கலாம். மறுபுறம், கே.கே.ஆர் அணியில் சின்ன மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆண்ட்ரே ரஸலின் உடல்நிலை குறித்து சந்தேகம் உள்ளது. ரஸ்ஸல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பததால், அவருக்கு பதிலாக ஷகிப்-அல்-ஹசன் இன்றும் விளையாடுவதைக் காணலாம்.
ALSO READ | தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி; வைரலாக போஸ்ட்
இரு அணிகளிலும் இந்த 11 பேர் விளையாட வாய்ப்புள்ளது:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (இ), தினேஷ் கார்த்திக் (wk), ஷாகிப் அல் ஹசன்/ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சிவம் மாவி, லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
யார் அதிகம் வெற்றி பெற்றார்கள்:
நடப்பு பருவத்தில் RCB மற்றும் KKR மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்திக்கும். லீக் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அதே சமயம், ஐபிஎல்லில் ஆர்சிபி மற்றும் கேகேஆருக்கு இடையே நடந்த 29 போட்டிகளில், கொல்கத்தா முன்னணியில் உள்ளது. கே.கே.ஆர் 16 போட்டிகளில் பெற்றுள்ளது. ஆர்சிபி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவனில் மாற்றம் ஏற்படுமா?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது கடைசி லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே அணியை அதே உத்வேகத்தில் எலிமினேட்டர் போட்டியில் களம் இறக்க ஆர்சிபி விருப்பப்படலாம். மறுபுறம், கொல்கத்தாவும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அணிக்கு திரும்புவதில் சந்தேகம் தான்.
ALSO READ | IPL 2021 CSK VS DC: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR