ஐபிஎல் 2024 : சாம்பியன் கேகேஆர் முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பரிசு தொகை எவ்வளவு?

IPL 2024 Prize money details : ஐபிஎல் 2024 பரிசுத் தொகை விவரம்: ஐபிஎல் 2024 கோலாகலமாக முடிந்திருக்கும் நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பெற்ற பரிசு தொகை விவரங்களை முழுமையாக பார்க்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2024, 01:11 PM IST
  • ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற கேகேஆர்
  • முதல் பரிசு வென்ற கேகேஆர் அணிக்கு ரூ. 20 கோடி பரிசு
  • ஆரஞ்சு கேப், நீல தொப்பி வென்றவர்களுக்கு தலா ரூ.10 லட்சம்
ஐபிஎல் 2024 : சாம்பியன் கேகேஆர் முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பரிசு தொகை எவ்வளவு? title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 பெரும் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரன்னர்-அப் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம், KKR 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையைப் பெற்றது. SRH அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதுதவிர ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பரிசு பெற்றிருக்கின்றன. மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்காக சஞ்சு சாம்சன் தலைமையிலான ஆர்ஆர் அணிக்கு ரூ. 7 கோடியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணிக்கு ரூ. 6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

ஆர்சிபியின் தாயத்து வீரர் விராட் கோலி ஆரஞ்சு கேப் வென்றார், ஊதா நிற தொப்பியை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் பெற்றார். இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதற்காக இருவரும் தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றனர்.கோலி 15 போட்டிகளில் 61.75 சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 741 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 113* மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 154.69. வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் லிஸ்டில் முதல் இடத்தைப் பிடித்தார்.

சன்ரைசர்ஸின் நிதிஷ் குமார் ரெட்டி தனது ஆல்-ரவுண்ட் பர்ஃபாமென்ஸூக்காக சீசனின் வளர்ந்து வரும் (Emerging Player) வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். KKR வீரர் சுயில் நரைன் ஐபிஎல் 2024 தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருதைப் பெற்றார்.

ஐபிஎல் 2024ல் பரிசு வென்றவர்களின் முழு பட்டியல்:

ஆரஞ்சு தொப்பி: விராட் கோலி - 741 ரன்கள் (ரூ 10 லட்சம்)

ஊதா நிற தொப்பி: ஹர்ஷல் படேல் - 24 விக்கெட்கள் (ரூ 10 லட்சம்)

சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சுனில் நரைன் (ரூ 12 லட்சம்)

சீசனின் அல்டிமேட் பேண்டஸி பிளேயர்: சுனில் நரைன்

அதிக 4கள்: டிராவிஸ் ஹெட் (64)

அதிக 6கள்: அபிஷேக் சர்மா (42)

சீசனின் ஸ்டிரைக்கர்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (234.04)

சீசனின் வளர்ந்து வரும் வீரர்: நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 20 லட்சம்)

சீசன் கேட்ச்: ராமன்தீப் சிங்

ஃபேர் ப்ளே விருது: SRH

பிட்ச் மற்றும் மைதான விருது: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்

ரன்னர்ஸ்-அப் விருது: SRH

சாம்பியன்: கே.கே.ஆர்

மேலும் படிக்க | IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News