IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!

IPL 2023 Mumbai indians: கேமரூன் கிரீனின் ஏப்ரல் மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  ஏலத்தில் மும்பை அணி அவரை அதிக விலைக்கு வாங்கியது.    

Written by - RK Spark | Last Updated : Jan 3, 2023, 09:28 AM IST
  • மீண்டும் திரும்பும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளார்.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பினார்.
IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு! title=

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணி கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  இதனால் மும்பை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.  ஆனால், சமீபத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டது.  இதனால் வரும் ஏப்ரல் மாதம் வரை க்ரீன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், ஆர்ச்சர் மும்பை அணிக்கு இந்த வருடம் விளையாட உள்ளார்.  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயங்களால் பாதிக்கப்பட்டு 2022 முழுவதும் விளையாடவில்லை.  இந்நிலையில் 2023-ல் தான் விளையாடப்போவதாக தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து ஏ அணிக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின் போது கிரிக்கெட்க்கு மீண்டும் திரும்புவது குறித்து தெரிவித்தார்.  "2022 நன்றி 2023 நான் தயாராக இருக்கிறேன்" என்று ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார்.  

மேலும் படிக்க | ரோஹித், விராட், சூர்யா ஐபிஎல் 2023ல் விளையாடுவது சந்தேகம்! பிசிசிஐ-ன் புது ரூட்!

வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜனவரி மாதம் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்.  ஆர்ச்சர் மார்ச் 2021க்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்து அணிக்குத் திரும்புகிறார். முழங்கை காயத்தில் இருந்து நன்றாக குணமடைந்து அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ODI உலகக் கோப்பை வெற்றியில் இங்கிலாந்தின் முன்னணி விக்கெட் வீழ்த்திய ஆர்ச்சர், கடைசியாக மார்ச் 2021ல் இங்கிலாந்தின் இந்திய டி20 சுற்றுப்பயணத்தில் சர்வதேச ஆட்டத்தை விளையாடினார்.  சமீபத்தில் பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்ததில் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக கவர்ந்த பென் டக்கெட், 2016 க்குப் பிறகு முதன்முறையாக ஒருநாள் அணிக்கு திரும்புகிறார். 

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஜானி பேர்ஸ்டோ காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். டேவிட் மாலன், ஜேசன் ராய், பில் சால்ட், ஹாரி புரூக் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அணியில் டாப்-ஆர்டர் விருப்பங்களாக உள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஆறு நாட்கள் நடைபெறும், தொடரின் முதல் போட்டி ஜனவரி 27 ஆம் தேதி ப்ளூமில் நடைபெறும், இறுதி ஆட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி கிம்பர்லியில் நடைபெறும்.

ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (C), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டேவிட் மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

மேலும் படிக்க: INDvs SL T20: இந்த இரண்டு பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை - ஹர்திக் பாண்டியாவின் அதிரடி முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News