ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த மைதானத்தில் இதற்கு முன் நடந்த 8 போட்டிகளில் நான்கு முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், நான்கு முறை பவுலிங் செய்த அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் முன்னேறும்.
Let's Play!#TATAIPL #PBKSvCSK pic.twitter.com/UJKwL3et07
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
மேலும் படிக்க | சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin
பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் ராஜபக்சா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராஜபக்ச 32 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். மறுபுறம் தவான் கடைசி வரை அவுட் ஆகாமல் 59 பந்துகளில் 88 ரன்களை விளாசினார். கடைசியில் லிவிங்ஸ்டன் 7 பந்துகளில் 19 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் அடித்தது.
Innings Break!
An 88* from Shikhar Dhawan and well supported by Bhanuka Rajapaksa (42) propels #PBKS to a total of 187/4 on the board.
Scorecard - https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/oJ1297kek7
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
சிறிது கடினமான இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய சென்னை அணியின் ஓபனிங் சுமாராகவே அமைந்தது. உத்தப்பா ஒரு ரன், சான்டனர் 9, டுபே 8 ரன் என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ருத்ராஜ் 27 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு 39 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 78 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்தார், மூன்றாவது பந்தில் எதிர்பாராதவிதமாக தோனி அவுட்டாக இந்த போட்டியில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
That's that from Match 38.@PunjabKingsIPL win by 11 runs.
Scorecard - https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/7tfDgabSuX
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR