IPL 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில் மும்பை அணி, கொல்கத்த அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 13, 2021, 11:55 PM IST
  • சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி
  • கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
  • ராகுல் சாஹர் ஆட்டநாயகன் விருது பெற்றார்
IPL 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் title=

IPL 2021, KKR vs MI: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில் மும்பை அணி, கொல்கத்த அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

153 ரன்கள் என்ற மிதமான இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டம் நன்றாகவே இருந்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களான கில்லும் ராணாவும் 72 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் கில் ஆட்டம் இழந்த பிறகு மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால், அணியின் சுமை ராணாவின் தோளில் விழுந்தது.

15வது ஓவரில் 122/3 என்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்தபோது, கே.கே.ஆர் அணியின் வெற்றி எளிதானதாகவே இருக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால், ராணா அவுட்டான சிறிது நேரத்திலேயே ஷாகிப் அவரை பின்தொடர்ந்தார். பிறகு அணியின் நிலை தொய்வடைந்தது.  வலிமைமிக்க மும்பைக்கு எதிராக வெற்றி பெறும் நிலையில் இருந்த கொல்கத்தா அணி இறுதியில் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Also Read | 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி, சஞ்சு சாம்சன் செஞ்சுரி!

2 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சாம்பியன்கள் ஆட்டத்தை வென்றனர். உண்மையில் மும்பை அணியின் பந்துவீச்சு செயல்திறன் பாராட்டுதலுக்கு உரியது! தோல்வியின் விளிம்புக்கு சென்று பின்னர் அங்கிருந்து வெற்றிப்  பாதைக்கு திரும்பினார்கள் மும்பை அணியினர்.

உண்மையில் இந்த ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. 153 ரன்கள் என்ற சுலபமான இலக்கையே நிர்ணயித்தனர் ஆனால் அவர்கள் ஏன் தற்காப்பு சாம்பியன்களாக செயல்பட்டு வெற்றியை கைப்பற்றினார்கள். 

தாங்கள் எப்படி 5 முறை சாம்பியன்களாக வாகை சூடியிருக்கிறோம் என்பதை அவர்களின் சமயோஜிதமான ஆட்டம் புரியவைத்தது. ஆனால் இந்த தற்காப்பு ஆட்டத் திறன் கொல்கத்தா அணியிடம் இல்லை.

மும்பை அணி தொடர் சாம்பியன், நடப்பு சாம்பியன் என்ற கே.கே.ஆர் அணியின் அச்சமே, அவர்களுக்கு தோல்வியைக் கொடுத்திருக்கலாம்.
ராகுல் சாஹர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் பாராட்டத்தக்கதாக இருந்தது. அதற்கான பரிசு ஆட்ட நாயகன் விருதாக ராகுக்ல் சாஹருக்கு கிடைத்தது.

Also Read | 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News