IPL 2021: CSK ரசிகர்களுக்கு நல்ல செய்தி, அணியில் சேருகிறார் இந்த அதிரடி ஆஸ்திரேலிய வீரர்

IPL 2021 இன்று துவங்கவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சேப்பின்யன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 02:41 PM IST
  • IPL 2021 துவங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.
  • இரண்டாவது முறையாக IPL-ல் விளையாடுவார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃப்.
  • IPL-ல் இருந்து விலகுவதற்கான காரணத்தை ஹேசல்வுட் கூறியுள்ளார்.
IPL 2021: CSK ரசிகர்களுக்கு நல்ல செய்தி, அணியில் சேருகிறார் இந்த அதிரடி ஆஸ்திரேலிய வீரர் title=

புதுடெல்லி: IPL 2021 இன்று துவங்கவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சேப்பின்யன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுவார்கள். 

IPL 2021 துவங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் (Josh Hazelwood) ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறி விட்டார். இப்போது மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை அணி, ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃபை (Jason Behrendorff) அணியில் சேர்த்துள்ளது. 

இரண்டாவது முறையாக IPL-ல் விளையாடுவார்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃப் இரண்டாவது முறையாக IPL-லில் விளையாடுவதைக் காணலாம். முன்னதாக 2019 ஆம் ஆண்டில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். பெஹ்ரெண்டோர்ஃப் ஆஸ்திரேலியாவுக்காக 11 ஒருநாள் மற்றும் 7 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டி 20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். IPL-ல், அவர் 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹேசல்வுட் பயோ பபிளில் இருக்க விரும்பவில்லை

இதற்கிடையில் இந்த ஆண்டு IPL-ல் இருந்து விலகுவதற்கான காரணத்தை ஹேசல்வுட் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஷஸ் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்காக தன்னை ஃபிட்டாக வைத்திருக்க விரும்புவதாக அவர் கூறினார். பயோ பபிளில் சிக்கிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட விரும்புவதாக அவர் கூறினார். 'இந்த கடினமான சூழலில் பயோ பபிள் மற்றும் தனிமைப்படுத்தலில் 10 மாத காலம் சென்று விட்டது. ஆகையால் நான் இப்போது கிரிக்கெட்டில் இருந்து சிறிது ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எனது வீட்டில் இருக்கப் போகிறேன்.” என்று ஹேசல்வுட் cricket.com.au இடம் கூறினார்.

ALSO READ: IPL 2021: CSK-வை வீழ்த்த நான்கு முக்கிய டிப்ஸ் அளித்தார் DC coach ரிக்கி பாண்டிங்

CSK 9 முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது 
CSK IPL வரலாற்றில் 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், CSK 3 முறை IPL டிராபியை வென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்த அணி கடைசியாக 2018 இல் நடந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்து IPL பட்டத்தை வென்றது.

IPL 2021 க்கான CSK அணி

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸி, ரிதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, என் ஜெகதீஷன், ராபின் ஊத்தப்பா, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், டுவைன் பிராவோ, ஆர். சாய் கிஷோர், மிச்சல் சேண்ட்னர், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஷர்துல் தாகுர், லுங்கி நிகிடி, ஜேசன் பெஹ்ரேண்டோர்ஃப், கே.எம். ஆசிஃப், மோயின் அலி, இருஷ்ணப்பா கவுதம், செதேஷ்வர் புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகாத் வர்மா, ஹரி நிச்ஷாந்த்.

ALSO READ: IPL 2021: சின்ன தல சுரேஷ் ரெய்னா சீறிப்பாய்ந்தால், CSK-வை யாராலும் நிறுத்த முடியாது: Aakash Chopra

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News