புதுடெல்லி: அண்மையில் தந்தையாக புது அவதாரம் எடுத்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடாசா மற்றும் மகன் அகஸ்தியாவின் புகைப்படத்தை பகிர்ந்துக் கொண்டார்.
புதுடெல்லி: அண்மையில் தந்தையாக புது அவதாரம் எடுத்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் போட்டிகளின்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் தன்னையும், அணியினரையும் உற்சாகப்படுத்தும் தனது மனைவி நடாசா மற்றும் மகன் அகஸ்தியாவின் அழகான புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது, இந்தியன் பிரீமியர் லீக் 2020 இல் விளையாடும் பாண்ட்யா தற்போது துபாயில் உள்ளார்.
மும்பை இண்டியன்ஸின் டி-ஷர்ட்களை அணிந்திருக்கும் மனைவி நடாசா மற்றும் மகன் அகஸ்தியா தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியைப் பார்க்கும் புகைப்படத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் "Queen" என்று பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் களத்தில் விளையாடும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மும்பை தங்கள் இன்னிங்ஸை 195/5 என்ற கணக்கில் முடித்து கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியன் ஆல் ரவுண்டர் மற்றும் அவரது அன்பு மனைவி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பதிவுகளை இட்டு பிரபலமானவர்கள். அவர்களின் இன்ஸ்டாகிராம் ஹேண்டில்களில் சுவாரஸ்யமான பதிவுகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டின் முதல் நாளில் கப்பலில் நடாசாவிடம் தனது காதலை முன்மொழிந்ததை ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.
2020 மே 31ஆம் தேதியன்று, ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்கள். அப்போதுதான் தங்களுக்கு குழந்தை பிறக்கவிருக்கும் செய்தியையும் அறிவித்தனர்.