ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது..!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (செப்டம்பர்-19) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று IPL தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையிலான 4-ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற CSK அணியின் கேப்டன் தோனி (MS.Dhoni) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 9 சிக்ஸர்கள் விளாசி 74 ரன்களை குவித்தார். சென்னையில் சாம் குரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ALSO READ | சச்சின், விராட் கோலி ஐ விட தல தோனி மிகவும் பிரபலமானவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர்
இதனையடுத்து, 217 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட துவங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய் 21, வாட்சன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாம் குரான் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து, கெயிக்வாட் டக் அவுட் ஆனார். ஜாதவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் டுபிளசிஸ் அதிரடி காட்டி சிக்ஸர்களாக பறக்க விட்டார். இருப்பினும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய தோனி சிங்கிள்களாக எடுத்து அவரை கடுப்பேற்றினார்.
WATCH - MS Dhoni's triple sixes in the final over.
No better sight than @msdhoni hitting maximums out of the park. Presenting 3 sublime sixes from the #CSK captainhttps://t.co/5IQYDOVcPE #Dream11IPL #RRvCSK
— IndianPremierLeague (@IPL) September 22, 2020
டுபிளசிஸ் 72(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 36 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தோல்வி உறுதியான நேரத்தில், கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார். அதில், ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.