ஐபிஎல் 2017, தகுதி சுற்று 2: மும்பை-கொல்கத்தா இன்று மோதல் - பைனலில் யார்?

Last Updated : May 19, 2017, 05:00 PM IST
ஐபிஎல் 2017, தகுதி சுற்று 2: மும்பை-கொல்கத்தா இன்று மோதல் - பைனலில் யார்?  title=

10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன.

புனே அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும்.

மும்பை அணி தகுதி சுற்று 1-ல் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. ஆனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எலிமினேட்டர் சுற்று மழையால் பாதிக்கப்பட்டதால், கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி. இந்த வெற்றியால் கொல்கத்தா அணி 2-வது தகுதி சுற்று போட்டி முன்னேறியது.

லீக் சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணியை வீழ்த்தி‌யுள்ளது மும்பை அணி. முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்க கொல்கத்தா அணிக்கு சரியான சந்தர்ப்பம். அதை பயன்படுத்திக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் மும்பை 15 வெற்றிகளையும், கொல்கத்தா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல்,  அம்பத்தி ராயுடு அல்லது நிதிஷ் ராணா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, லென்டில் சிமோன்ஸ், மெக்லெனஹான், ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, பும்ரா, மலிங்கா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, சுனில் நரின், கிறிஸ் லின், யூசுப் பதான், இஷாங் ஜக்கி, சூர்யகுமார் யாதவ், பியுஷ் சாவ்லா அல்லது குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், நாதன் கவுல்டர்-நிலே, டிரென்ட் பவுல்ட்.

 

 

Trending News