இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 274 ரன்கள் குவித்துள்ளது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் 5-வது ஒருநாள் நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களமிரங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரோகித் 115(126) எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார், இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
Innings Break! #TeamIndia 274/7 in 50 overs (Rohit 115).
Updates - https://t.co/tte6qjPZrA #SAvIND pic.twitter.com/7xOA2nOmaK
— BCCI (@BCCI) February 13, 2018
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கிசனி நகிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க களம் இரங்குகிறது.
முன்னதாக, இத்தொடரில் நடைப்பெற்ற போட்டிகளில், மூன்று போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.