இலங்கை அணி 44.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 216 ரன்கள் தேவை.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. தர்மசாலா ஆடுகளத்தில் பேட்டிங் தள்ளாடிய இந்திய அணி வீரர்கள், மொகாலியில் வெளுத்து வாங்கி வென்றனர்.
இந்நிலையில், இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தனர். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தனுஷ்கா குணதிலக மற்றும் உப்புல் தாரங்கா இலங்கை தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3.4 ஓவரில் தனுஷ்கா குணதிலக 13(12) ரன்னில் ஜாஸ்ப்ரித் பும்ராஹ பந்தில் அவுட் ஆனர். பின்னர் உப்புல் தாரங்காவுடன் ஜோடி சேர்ந்த சதீரா சமாராவிக்ராமா இருவரும் இணைத்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 22.3 ஓவரில் யூசுவெந்திர சஹால் வீசிய பந்தில் சதீரா சமாராவிக்ராமா 42(57) ரன்னில் கேட்ச் அவுட் ஆனர்.
நன்றாக விளையாடி சதத்தை நோக்கி சென்ற இலங்கை வீரர் உப்புல் தாரங்கா 95(82) ரன் எடுத்திருந்த போது யூசுவெந்திர சஹால் வீசிய பந்தில் தல தோனியின் அற்புதமான ஸ்டெம்பிங்கில் அவுட் ஆனர்.
பின்னர் நீரோஷன் டிக்வெல்ல 8(4) ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 17(28) ரன்னிலும், இலங்கை கேப்டன் திசரா பெரேரா 6(6) ரன்னிலும், சச்சித் பத்திராணா 7(12) ரன்னிலும், அகிலா தானன்ஜாயா 1(4) ரன்னிலும், சுரங்கா லக்மால் 1(2) ரன்னிலும், நுவன் பிரதீப் 17(51) ரன்னிலும் அவுட் ஆனார்கள். 0(11) ஆசேலா குணரத்னே ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய தரப்பில் யூசுவெந்திர சஹால், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், 2 விக்கெட்டும், பும்ராஹ, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இலங்கை அணி 44.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 216 ரன்கள் தேவை.