4வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு; அஸ்வின் விளையாடுவாரா?

நாளை சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4வது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 02:03 PM IST
4வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு; அஸ்வின் விளையாடுவாரா? title=

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை துவங்க உள்ளது. 

நாளை நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இசாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல். ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாத அஸ்வின், 4வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரின் உடல் தகுதியை பொறுத்தே நாளை காலை தொடங்க உள்ள போட்டிக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என முடிவு செய்யப்படும் எவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

சிட்னி மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், அஸ்வின் களம் இறங்கினால், இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய அணி விவரம்: கேப்டன் விராத் கோஹ்லி, ரஹானே, கே.எல். ராகுல், மாயன்க் அகர்வால், சி. புஜாரா, எச் விஹாரி, ஆர் பாண்ட், ஆர் ஜடேஜா, கே யாதவ், ஆர் அஸ்வின், எம் ஷாமி, ஜஸ்ரைட் பும்ரா, உமேஷ் யாதவ்.

Trending News