INDvsSA 2nd T20:தென் ஆப்பிரிக்கா வெற்றி!! தொடர் சமநிலை 1-1

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

Last Updated : Feb 22, 2018, 01:25 PM IST
INDvsSA 2nd T20:தென் ஆப்பிரிக்கா வெற்றி!! தொடர் சமநிலை 1-1  title=

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்-ல் நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இன்று 2_வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மனீஷ் பாண்டே 79(48) ரன்களும், தோனி 52(28) ரன்களும் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 18.4 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டூமினி 64(40) ரன்களும், பாரஹான் பெஹார்தியன் 16(10) ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி வரும் 24-ம் தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. 

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மண்ணில், 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டி20 தொடரை கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றுவார்களா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

 


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்-ல் நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இன்று 2_வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மண்ணில், 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டி20 தொடரை கைப்பற்றி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இம்முறையும் டி20 தொடரை கைப்பற்றுவார்களா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Trending News