தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடிய இந்திய அணி, அடுத்தடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. அனுபவம் குறைவான வீரர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என யூகிக்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட் விமர்சகர்களின் கணிப்பை பொய்யாக்கும் வகையில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியில் இருந்து மீண்டு, வெற்றிக்கொடி நாட்டியது.
ALSO READ | ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்..!
குறிப்பாக, 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போட்டியில், டீன் எல்கருக்கு கொடுக்கப்பட்ட டி.ஆர்.எஸ் முடிவு இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கள நடுவராக இருந்த எராஸ்மஸூம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. பின்னர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் சென்று, எதிரணி மீது கவனம் செலுத்த வேண்டாம், உங்கள் அணியின் மீது கவனம் செலுத்துங்கள் என நேரடியாக வசைபாடினார்.
ALSO READ | ஜோகோவிச் விசா 2 முறை ரத்து- உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், ஒட்டுமொத்த தேசமும் 11 பேருக்கு எதிராக செயல்படுகிறது என சாடினார். இதேபோல், அஸ்வின், மயங்க் அகர்வால் உள்ளிட்டோரும் தங்களின் அதிருப்தியை களத்தில் பதிவு செய்தனர். இதனால், இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்திய அணிக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. அம்பயர்கள் நினைத்திருந்தால், இந்திய அணிக்கு அபராதம் விதித்திருக்க முடியும். ஆனால் அம்பயர்களின் ஏதோ கரிசனப் பார்வையால், ஒட்டுமொத்த இந்திய அணியும் அபராதத்தில் இருந்து தப்பித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக 3 டெஸ்ட் சாம்ப்யன்ஷிப் புள்ளிகளை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR