ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி!

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும்  ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.  

Written by - Yuvashree | Last Updated : Nov 5, 2023, 11:22 AM IST
  • ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் பந்தையம் இன்று நடைப்பெற்றது.
  • இதில் இந்திய வீரர்கள் வெற்றி கண்டனர்.
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி! title=

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும்  ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின.  

இன்று நடைபெற்ற  ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் பந்தயத்தில் இந்திய வீரர்களான காட் ஸ்பீட் கொச்சி அணியின் அக்ஷய் போஹ்ரா, ஸ்பீட் டிமான் டெல்லி அணியின் ரோஷன்  ராஜீவ், ஹைதராபாத் பிளாக் பேர்டு அணியின் ஷஹான் அலி மோஹ்சின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

நாளை நடைபெறும் போட்டிகளின் அடுத்த சுற்று நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ளன. இறுதிப்போட்டிகள் சென்னையின் மையத்தில் உள்ள தீவுத்திடலில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தால்... இவரை வெளியே வையுங்க... இந்தியாவின் வெற்றிநடை தொடரும்!

இந்தியா மற்றும் தெற்காசியாவில் இரவுப் பந்தயம் மற்றும் ஸ்ட்ரீட் சர்க்யூட் முதன்முறையாக இங்கு நடத்தப்பட உள்ளன.  இந்த இறுதிப்போட்டிகள் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளன.   ஆண்கள் மற்றும் பெண்கள் குழு அடிப்படையிலான சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் இந்தியாவின் ஒரே மோட்டார் ஸ்போர்ட்ஸ் லீக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த RPPL நிர்வாக இயக்குநர் அகிலேஷ் ரெட்டி ,  2 நாட்கள் கார் பந்தயத்தில் உலகம் முழுவதும் இருந்து 

வீரர்கள், குறிப்பாக அதிக அளவில் ஐரோப்பியர்கள் பங்கேற்பதாக தெரிவித்தார்.  40 சதவீதம் இந்திய வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவில் முதல் முறையாக Street Circuit மற்றும் இரவு பந்தயம் நடைபெறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பந்தயம் நடைபெற காரணமாக இருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது... அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News