பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலரின் சமீபத்திய கருத்துக்களுக்காக இந்திய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி (Manoj Tiwari) திங்கள்கிழமை அவர்களுக்கு சரியான பதிலை அளித்துள்ளார். சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் திவாரி, ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ் மற்றும் சல்மான் பட் போன்றவர்களின் கருத்துகளைக் கொண்ட ஒரு இடுகையைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். திவாரி பாகிஸ்தான் வீரர்களின் கருத்துக்களுக்காக அவர்களை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிக்கைகள் பொறாமையை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக (IPL) இந்த ஆண்டு T- 20 உலகக் கோப்பையை ICC ஒத்திவைத்ததாக அக்தர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஷீத் லத்தீப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தனர். BCCI-ஐ குறி வைத்து பேசிய அக்தர், “"T- 20 உலகக் கோப்பை (T-20 World Cup) நடந்திருக்கும். ஆனால், இதை நடக்க விடமாட்டார்கள் என நானுன் ரஷீதும் முன்னரே கூறினோம். IPL நடக்க வெண்டும் என்பதற்காக BCCI இதை ஒத்திவைக்க வைத்தது. அவர்களுக்கு IPL நடந்தால் போதும் T-20 உலகக் கோப்பை எப்படி போனாலும் பரவாயில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான வகார் யூனிஸ் திங்களன்று, பாகிஸ்தான் அணியில் இந்திய கேப்டன் விராட் கோலியின் உடற்பயிற்சி முறைகளை பின்பற்ற மாட்டோம் என்றும், எங்களுக்கான முறையை நாங்களே அமைத்துக் கொள்வோம் என்றும் கூறினார். கிரிகெட் உலகைப் பொறுத்த வரை, விராட் கோலி ஃபிட்னஸ் விளையாட்டு என இரண்டிலும் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்த கருத்துக்களுக்காக திவாரி சல்மான் பட்டைடை விமர்சித்தார். 2012 ஆம் ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் ஊழலில் தடை செய்யப்பட்ட பட், ஒரு யூடியூப் வீடியோவில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் டெஸ்ட் தொடரின் போது ஆர்ச்சர் உயிரியல் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கக் கூடாது என்று கூறினார்.
ALSO READ: பயங்கர கோபத்தில் சோயிப் அக்தர், 'T20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பு; BCCI இன் கை'
திவாரி தனது இடுகையில், "இந்த அறிக்கைகளைப் பார்த்தால் இவர்களது பொறாமை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சல்மான் பட், விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. கடவுள் அவர்களை நல்ல புத்தியுடன் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று எழுதினார்.
திவாரி கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். பின்னர் வங்காளத்திற்கான அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு நடந்த IPL ஏலத்திலும் யாரும் அவரை தங்கள் அணிக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
தற்போது ஷொயப் அக்தர், வகார் யூனிஸ் ஆகியோரின் கருத்துகளுக்கு இவர் பதில் அளித்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.