தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று சூரத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஹர்ம்பிரீட் கரூர் 43(34) ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
A valiant half-century from Mignon du Preez isn't enough to see South Africa to victory over India!
They lose by 11 runs, giving India a 1-0 lead in the five-match series. pic.twitter.com/46IBPI2jwh
— ICC (@ICC) September 24, 2019
இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, ஆட்டத்தின் 19.5-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இன்றைய போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக மிக்னன் 59(43) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி வரும் செப்., 26-ஆம் நாள் குஜராத் லால் பாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.