INDvsWI 3rd T20I : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ்-யை வீழ்த்திய இந்தியா!

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது! 

Last Updated : Aug 7, 2019, 10:50 AM IST
INDvsWI 3rd T20I : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ்-யை வீழ்த்திய இந்தியா! title=

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது! 

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று கயானாவில் நடைபெற்ற 3-வது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்தது. இந்திய வீரர் சகாரின் அபார பந்துவீச்சில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது.

இதையடுத்து களமிறங்கிய பொல்லார்டு, 58 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். பாவலின் கடைசி நேர அதிரடியால் வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனால், 19.1 ஓவரில் 150 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சகார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதித்தது. 20 ஓவர் போட்டித் தொடரின் நாயகனாக குர்னல் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

 

Trending News