India vs Srilanka: முக்கிய வீரரை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

india vs srilanka: இலங்கை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து சிகார் தவான் நீக்கப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 28, 2022, 08:28 AM IST
  • ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.
  • சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கம்.
  • இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு.
India vs Srilanka: முக்கிய வீரரை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ! title=

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ (டிசம்பர் 27) அறிவித்தது. இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் தவான் மோசமான பார்முடன் போராடி வருகிறார். 2022ல் அவரது சராசரி 34.40 மற்றும் ஸ்டிரைக் ரேட் 74.21 என மிகக் குறைவாக இருந்தது. ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளனர். கில் 2022ல் 102.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 70க்கு மேல் சராசரியாக வைத்துள்ளார், ​​​​கிஷன் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் ஆனார். தாவனுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், அவரை அணியில் எடுக்காதது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில், தேர்வாளர்கள் இரு அணிகளிலிருந்தும் ரிஷப் பந்தை நீக்கியுள்ளனர். வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளிலும் பந்த் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நியூசிலாந்தில் நடக்கும் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஹர்திக் பாண்டியா மீண்டும் டி20 வடிவத்தில் இந்தியாவை வழிநடத்துவார். மேலும் KL ராகுல் அணியில் இருந்தபோதிலும், ஒருநாள் போட்டியில் ஹர்திக் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 வடிவத்தில் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | IPL Auction: உச்சகட்ட விரக்தியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் இடம்பெற வில்லை, ஆனால் மூவரும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புவார்கள். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் ஷிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். குல்தீப் யாதவ் டி20 அணியில் தனது இடத்தை இழந்துள்ளார், ஆனால் ODI அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பந்த்க்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குணமடைந்து வருவதால் இரு அணிகளிலும் இடம்பெறவில்லை. இந்த தொடர் ஜனவரி 3ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

டி20 அணி: ஹர்திக் பாண்டியா (C), இஷான் கிஷன் (Wk), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (VC), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (C), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (Wk), இஷான் கிஷன் (வி.கே.), ஹர்திக் பாண்டியா (VC), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

மேலும் படிக்க | ஊசலில் இருந்த பாகிஸ்தான்! தூக்கி நிறுத்திய கேப்டன் பாபர் அசாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News