SAFF கால்பந்து கோப்பையை 9வது முறையாக வெல்லுமா இந்தியா? இன்று இரவு தெரிந்துவிடும்

SAFF Championship Final 2023: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் 8 முறை பட்டம் வென்றுள்ள இந்திய அணி, ஒன்பதாவது முறையாக பதக்கம் வெல்லுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 4, 2023, 03:43 PM IST
  • தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டி இன்று
  • 8 முறை இந்திய அணி பட்டம் வென்றுள்ளது
  • ஒன்பதாவது முறையாக பதக்கம் வெல்லுமா இந்திய கால்பந்து அணி?
SAFF கால்பந்து கோப்பையை 9வது முறையாக வெல்லுமா இந்தியா? இன்று இரவு தெரிந்துவிடும் title=

பெங்களூரு: இந்தியா தனது வரலாற்றில் ஒன்பதாவது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்தில் செவ்வாய்கிழமை நடைபெறும் SAFF கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் SAFF சாம்பியன்ஷிப்பில் மிகவும் திறமையான அணிகள் என்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும்.

இதுவரை நடைபெற்றுள்ள 13 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 8 முறை பட்டம் வென்றுள்ளது. நடப்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7.30 மணி அளவில் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் களம் காண்கின்றன. கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி தனது ஒன்பதாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் 8 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான், குவைத், வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

மேலும் படிக்க | Worldcup 2023: உலக கோப்பைக்கு முன்னேற ஸ்காட்லாந்துக்கு பிரகாசமான வாய்ப்பு

குவைத் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியக்கு தகுதி பெற்ற நிலையில், இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இந்த ஆண்டு குவைத் மற்றும் லெபனான் போன்ற அணிகள் முன்னிலையில் இருப்பதால், SAFF சாம்பியன்ஷிப் 2023 ஐ வெல்வது முந்தைய சாம்பியன்ஷிப் செயல்திறனை விட உயர்ந்த தரவரிசையில் இருக்கும் என்று இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளர் மகேஷ் கவ்லி கருதுகிறார். 

ஒரு வீரராக போட்டியில் இரண்டு முறை வெற்றியாளராக இருந்த கவ்லி, சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வழியில் இரண்டு வலுவான அணிகளான குவைத் மற்றும் லெபனான் அணிகளை தோற்கடிப்பதால் வழக்கத்தை விட இந்த போட்டித்தொடர் சிறப்பானது என்று கருதுகிறார்.

"குவைத் ஒரு நல்ல எதிரி, மற்றும் போட்டி கடுமையாக இருக்கும்அப்போது, நாங்கள் SAFF அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடினோம். 2005 இல் கராச்சியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இந்த இறுதிப்போட்டியில் நாங்கள் வென்றால், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மகிழ்ச்சி வேறு லெவலில் இருக்கும், ”என்று குவைத்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கவ்லி தெரிவித்தார்.

மேலும் படிக்க | IND vs WI: இவருக்கு எதற்கு துணை கேப்டன்? பிசிசிஐக்கு தொடரும் எதிர்ப்பு!

இரு அணிகளும் குழு கட்டத்தில் சந்தித்தபோது, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. ஆனால் இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.  

"இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவது அவசியம். இது முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாக இருக்கும். எங்களிடம் ஒரு நேர்மறையான உணர்வு உள்ளது, மேலும் நாங்கள் இதுவரை எப்படிச் செய்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தொடர முடியும் என்று நம்புகிறேன், ”என்று கவ்லி மேலும் கூறினார்.

இந்திய அணியின் மைய வீரர் சந்தேஷ் ஜிங்கன் லெபனானுக்கு எதிரான பெனால்டியில் அரையிறுதி வெற்றியைத் தவறவிட்டார், இறுதிப் போட்டிக்கு மீண்டும் களமிறங்குவார். இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, லீக் சுற்றில் ஹாட்ரிக் உட்பட 5 கோல்கள் அடித்திருந்தாலும், லெபனானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கோல் அடிக்க சிரமப்பட்டார்.

இறுதியில், பெனால்டி ஷூட் அவுட்டில் தனக்கான வாய்ப்பை கோலாக மாற்றினார். சாஹல் அத்துல் சமத், மகேஷ் சிங், உதாந்தா சிங் ஆகியோர் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மேலும் படிக்க | ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் விளையாடுவாரா? கோலி, சூர்யகுமாருக்கு ட்ஃப் பைட் கொடுக்க ரெடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News