IND vs AUS: மும்பை ஒருநாள் போட்டிக்கு முன்பு விராட் கோலி கூறிய திட்டம்

கேப்டனாக விடைபெறுவதற்கு முன்பு தற்போதைய அணியைப் போலவே வலுவான ஒரு அணியை தயார் செய்துவிட்டு வெளியேற விரும்புகிறேன் என்று விராட் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2020, 12:21 PM IST
IND vs AUS: மும்பை ஒருநாள் போட்டிக்கு முன்பு விராட் கோலி கூறிய திட்டம் title=

மும்பை: இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) கேப்டன் என்ற முறையில் வெற்றியை அடைய விரும்புவது மட்டுமல்லாமல், எதிர்கால இந்திய அணியை தயார்ப்படுத்தி வருவது தான் அவரது முக்கிய முயற்சி ஆகும். இந்திய அணிக்கான நீண்டகால பார்வை குறித்து அவர் பேசியுள்ளார். கேப்டனாக விடைபெறுவதற்கு முன்பு தற்போதைய அணியைப் போலவே வலுவான ஒரு அணியை தயார் செய்துவிட்டு வெளியேற விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை இந்தியா விளையாட உள்ளது. போட்டிக்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த விராட் கோஹ்லி "அணியின் ஒரு கேப்டனாக தற்போதுள்ள அணியைப் வழிநடத்துவது மட்டுமல்லாமல், அணியில் இருந்து வெளியேறும் போது அணியை வலுவான ஒரு அணியை உருவாக்கி தந்து செல்வது தான் என்னுடைய விருப்பமாகும். எதிர்காலத்திற்கான இந்திய அணியை தயார் செய்வதை உறுதி செய்வதே எனது வேலை. பலர் அந்த கோணத்தில் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் ஒரூ கேப்டனாக எனது பணி அதுவாகும் என்றார்.

மேலும் பேசிய அவர், "நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தனது சொந்த நலனுக்காக விளையாடுவது எளிது. எனக்கா ரன் எடுப்பதும், அதற்காக நான் விளையாடுவதும் சந்தோசத்தை தருகிறது. ஆனால் அதைவிட ஒரு அணியை உருவாகுவது என்பது மிக முக்கியம் என்றார். நமது பார்வை எப்போதும் பெரியதாக இருக்க வேண்டும். இந்த வீரர்களை நீங்கள் எவ்வாறு நம்பிக்கையூட்ட முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு யாராவது பொறுப்பேற்க விரும்பினால், நான் இருக்கிறேன். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என்றார். 

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான தற்போதைய அணி, முந்தைய அணியை விட வலுவானது என்றும் நான் கருதுகிறேன் என்றார். இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News