இந்தியா VS இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!!

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. மழை பெய்து வரும் காரணத்தால் போட்டி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Last Updated : Nov 16, 2017, 08:31 AM IST
இந்தியா VS இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!! title=

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. மழை பெய்து வரும் காரணத்தால் போட்டி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அந்த வகையில் தற்போது இலங்கையை நாளை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஈடன் கார்டன் மைதானத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று இந்திய வீரர்கள் மாலை நேர பயிற்சியை கைவிட்டுள்ளனர்.

அணி விவரங்கள்:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ராகுல்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, சமரவிக்ரமசிங்கே, மேத்யூஸ், டிக்வெலா, திரிமானே, ஹெராத், தகன் ‌ஷன்கா, விஷ்வா பெர்னாண்டோ, ரோகன் சில்வா, லக்மல், தில்ருவன் பெனரரா, லகிரு கமாகே, சன்டகன், தனஞ்செயன் சில்வா. 

Trending News