கோலியின் 254 ரன், இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது!

புனேவில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Oct 11, 2019, 05:17 PM IST
கோலியின் 254 ரன், இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது! title=

புனேவில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் குவித்துள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனே மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் (108), சட்டேஷ்வர் புஜாரா (58) ஆகியோர் குறிப்பிடத்தக்க (138) ரன்கள் குவித்து சென்றனர். கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவை 273/3 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தது. இதனையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணித்தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி 254(336) ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு துணையாக ரவிந்திர ஜடேஜா 91(104) ரன்கள் குவித்தார். இதனையடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியின் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Trending News