உடல் பருமன் சட்டென்று குறையணுமா... இந்த உணவுகளுக்கு No சொல்லுங்க

Weight Loss Tips: மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவை பல உடல் நல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று உடல் பருமன்.

 

உடல் பருமன் ஒரு நோய் இல்லை என்றாலும், அது பலவித நோய்கள் ஏற்பட காரணமாகி விடுவதால், அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உடல் எடை கூடுவது தோற்றத்தைக் கெடுப்பதோடு, மூட்டு வலியில் இருந்து இதய நோய் வரை பல்வேறு நோய்களின் கூடாரமாக உடலை ஆக்கி விடுகிறது.

1 /8

Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க, பலவித முயற்சிகள் செய்தாலும் சில சமயங்களில், அவை பலன் தராமல் போகலாம். அதற்கு, ஆரோக்கியமற்ற சில உணவுகளை உணவில் இருந்து ஒதுக்கி வைக்காதது காரணமாக இருக்கலாம்.  

2 /8

வெள்ளை நிற உணவுகள்: உடல் எடைக்கும், டயட்டிற்கும் நேரடி சம்பந்தம் உண்டு என்பதால், உடல் எடை குறைய டயட்டில் கவனம் செலுத்துவது மிக அவசியம். உடல் பருமனை குறைக்க சில விஷயங்களை சாப்பிடுவது அவசியம் என்பதைப் போல், சில விஷயங்களை தவிர்ப்பதும் மிக அவசியம். அதில் ஒன்று வெள்ளை நிறம் கொண்ட சில உணவுகள்

3 /8

மைதா: மைதாவில் செய்த பரோட்டாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அதில் உள்ளது அனைத்தும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே மைதா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் விலக்கி வைப்பது நல்லது.  

4 /8

சர்க்கரை: சர்க்கரை சேர்த்த உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் உடல் எடை குறைவதில் வியக்கத்தக்க மாற்றத்தை காரணம். காபி டீ மட்டுமல்லாது, பிஸ்கட் சாக்லேட் கேக் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தால், உடல் எடை மலம் அளவென குறையும்.  

5 /8

வெள்ளை பிரட் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. காலை உணவிற்கு பலர் பிரட்டில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சை சாப்பிடும் பழக்கம் உள்ளது. மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரொட்டி, உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

6 /8

உப்பு அளவிற்கு அதிகமான உப்பு, பிபி என்னும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு காரணமாக இருப்பதோடு, உடலில் நீரை தேக்கி வைத்து உடல் பருமனை அதிகரிக்கிறது. அதோடு அளவிற்கு அதிக உப்பு சிறுநீரகத்தையும் பாதிக்கும். எலும்புகளையும் பலவீனப்படுத்தும். 

7 /8

சுத்திகரிக்கப்பட்ட அரிசி: அரிசி உணவை முற்றிலும் தவிர்ப்பது கடினமான ஒன்று என்பதோடு, மற்ற வெள்ளை உணவுகளை போல் அத்தனை பாதிப்பை கொடுக்கக் கூடியதும் அல்ல என்பதால் முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக காய்கறிகளையும் பருப்புகளையும் அதிகம் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. அரிசிக்கு பதிலாக சிறு தானிய உணவுகளை சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்.

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)