ராஜ்கோட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதுவரை இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி எந்த வெற்றியும் டெஸ்டில் பெற்றதில்லை. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு முன்பு நியூசிலாந்து அணியை மும்பையில் 372 ரன்களுக்கு வீழ்த்தியதே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. இப்போது, இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் இந்திய அணி பெற்ற வெற்றி அந்த இடத்தை பிடித்துள்ளது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகள்:
434 vs இங்கிலாந்து, ராஜ்கோட் 2024
372 vs நியூசிலாந்து, மும்பை WS 2021
337 vs தென்னாப்பிரிக்கா, டெல்லி 2015
321 vs நியூசிலாந்து, இந்தூர் 2016
320 vs ஆஸ்திரேலியா, மொஹாலி 2008
மேலும் படிக்க | Yashasvi Jaiswal: யஷஸ்வி ஜெய்ஷ்வால் உடைத்தெறிந்த ரெக்கார்டுகள்..!
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற மிகப்பெரிய இரண்டாவது தோல்வியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1934 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 562 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது. அதன்பிறகு இப்போது ராஜ்கோட்டில் நடைபெற்றிருக்கும் டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அடைந்த தோல்விகள்:
562 vs ஆஸ்திரேலியா, தி ஓவல் 1934
434 vs இந்தியா, ராஜ்கோட் 2024
425 vs வெஸ்ட் இண்டீஸ், மான்செஸ்டர் 1976
409 vs ஆஸ்திரேலியா, லார்ட்ஸ் 1948
405 vs ஆஸ்திரேலியா, லார்ட்ஸ் 2015
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் இந்திய அணி, அனுபவம் மிக்க வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியை துவம்சம் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்களின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்துடன் ஒப்பிடும்போது, இந்திய அணியில் இருக்கும் பல வீரர்களுக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் மிக மிக குறைவு. ஜெய்ஷ்வால், இந்திய அணியில் விளையாடும் இளம் வீரர். அவருக்கு இப்போது தான் 22 வயதாகிறது. ஆனால், ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தார். முதல் இன்னிங்ஸில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்தார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர், டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனைகள் எல்லாம் ஜெய்ஷ்வால் படைத்திருக்கிறார். அதேபோல் இப்போட்டியில் அறிமுகமான சர்பிராஸ்கான் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல், கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் எடுத்தார். சுப்மான் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்தார். ஜடேஜா முதல் இன்னிங்ஸில் சதமடித்து 112 ரன்கள் எடுத்ததுடன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Ravichandran Ashwin: அஸ்வினுக்கு பதிலாக படிக்கல் பேட்டிங் செய்ய முடியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ